விக்ரம்
விக்ரம்

தங்கலானாக வரப்போகிறார் சீயான் விக்ரம்!

'தங்கலான்' சீயான் : பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படத்திற்கு தங்கலான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சீயான் 61 என்று  தற்காலிகமாக  பெயர் வைத்து   இருந்த இப்படத்திற்கு தற்போது தங்கலான் என்று பெயர் வைத்துள்ளார்கள்.       

கோலார் தங்கவயல் பகுதியை மைய்யமாக கொண்டு  கதைகளம் இருப்பதால் இந்த தலைப்பை  இப்படத்திற்கு  வைத்துள்ளார் ரஞ்சித்.         

ஆக்ஷன் பின்னணி கொண்ட கதையில் மாளவிகா   மோகன் விக்ரமிற்கு ஜோடியாக  நடிக்கிறார்.ஒரு விலங்கின் மீது கையில் அரிவாளுடன் விக்ரம் அமர்ந்து இருக்கும் போஸ்டர் மிக வித்தியாசமாக இருக்கிறது.         

இந்த ஆண்டு மணிரத்னம் கூட்டணியில் ஆதித்த கரிகாலனாக வந்த விக்ரம் அடுத்த 2023 ல் பா.ரஞ்சித்துடன் கை கோர்த்து தங்கலானாக வரப்போகிறார். சினிமா ரசிகர்கள்  வரும் புத்தாண்டில் வேறு ஒரு சீயானை காணப்போகிறார்கள் 

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com