சர்ச்சைக்குள்ளான படம் வெளியீடு!

மும்பை பர- பர
சர்ச்சைக்குள்ளான படம் வெளியீடு!

”பேஷ்ரம் ரங்’ பாடலில் பிரபல நடிகை தீபிகா படுகோனே காவி நிறத்தில் கவர்ச்சியாக உடையணிந்து நடன மாடியிருந்தது இந்துத்வ ஆதரவாளர்களால் விமரிசிக்கப் பட்டு சர்ச்சைக்குள்ளானது.

இது தொடர்பாக, மத்திய பிரதேசப் பிரதேர உள்துறை அமைச்சர், பாடலிலுள்ள காட்சிகள்; உடைகள் ஆகியவைகளை மாற்றியமைக்குமாறு படத் தயாரிப்பாளர்களிடம் கேட்டுக் கொண்டார். அயோத்தியைச் சேர்ந்த சாமியார், ஷாருக்கானை நேரில் பார்த்தால் எரித்து விடுவேன் என்றும், வேறு யாராவது எரித்தால், ஆதரவு தெரிவிப்பேன் என்றும் கூறினார். ஷாருக்கானை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டுமென பா.ஜ.க. எம்.பி ஒருவர் எச்சரித்துள்ளார்.

மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா
மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா

இந்நிலையில், இப்படத்தின் டிரெயிலர் சமீபத்தில் வெளியாக, நல்ல வரவேற்பு கிடைக்கப் பெற, வரும் 25 ஆம் தேதி அநேக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

’ஷாருக்கான் யுனிவர்ஸ்’ என்கிற ரசிகர் அமைப்பு முதல் நாள், முதல் காட்சியை 200 நகரங்களில் ஒரே நேரத்தில் 50,000 பேர்கள் பார்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

முதல் நாள், முதல் காட்சியோடு  நிறுத்தி விடாமல், தொடர்ந்து கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது. மும்பையில் 7/8 மற்றும் டெல்லியில் 6 காட்சிகள் திரையிடப்பட விருக்கின்றன. பல பிரச்னைகள் படத்திற்குத் தொடர்ந்து வரும் நிலையில் ரசிகர்கள் மும்முரமாக ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

கோலிவுட், டோலிவுட்டைத் தொடர்ந்து பாலிவுட் ரசிகர்கள் தங்களது முன்னணி நடிகர்களின் புதுப்படங்களைக் கொண்டாட முற்பட்டுள்ளனர்.

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாருக்கான், தீபிகா படுகோனே ஆகிய பலர் நடிப்பில் இந்தியில் உருவாகியுள்ள இப்படத்தை 25 அன்று திரையரங்கில் காணலாம். படம் ‘பதன்’

*****************************

தினமும் ` 50 அபராதம்

எதற்காக அபராதம்...?

மும்பை மாநகரில் சுமார் 40,000 டாக்சிகள்; 1,40,000 ஆட்டோக்கள் ஆர்.டி.ஓ அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவைகளின் மீட்டர்களை மறுசீரமைப்பு செய்வதற்கான கெடு 15.1.2023 வரை MMRDAவால்  (மும்பை பெருநகர போக்குவரத்து ஆணையம்) கொடுக்கப்பட்டிருந்தது.

2022 அக்டோபர் 1 ஆந் தேதி முதல் குறைந்த பட்ச டாக்சி கட்டணம் ` 23/-லிருந்து ` 28/- ஆகவும்; ஆட்டோ கட்டணம் ` 21/-லிருந்து ` 23/- ஆகவும் அதிகரிக்கப்பட்டன. இதனைச் செயல்படுத்த, மீட்டர்களை மாற்றியமைக்க வேண்டு மென MMRDA  உத்தரவிட்டது. முதலில் நவம்பர் 30வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இக்கால கட்டத்தில் அநேக பேர்களால் மீட்டரை மாற்றியமைக்க இயலாமல் போக, ஜனவரி 15, 2023 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

தற்போது இதுவும் முடிந்துவிட, இன்னமும் 25 சதவீதம் டாக்சி மற்றும் ஆட்டோக்களின் மீட்டர்கள் மாற்றப் படவில்லை. இதன் காரணமாக, திருத்தி அமைக்கப்பட்ட புதிய கட்டணத்தை இவர்களால் வசூலிக்க இயலாது. பயணிகள் பழைய கட்டணத் தைத்தான் கொடுப்பார்கள்.

அளவீடு செய்வதில் தாமதம் ஏற்படுகின்ற காரணத்தினால், நாள் ஒன்றுக்கு ` 50/- அபாரதமாக விதிக்கப்படும் என்றும் MMRDA அதிகாரிகள் கூறியுள்ளனர்.

காலதாமதம் காசு விரயம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com