தேவியிடம் செல்ல முடியவில்லை! 2023ல் இதுபோன்று பாகுபாடு தொடர்வது வேதனையளிக்கிறது - அமலா பால் வருத்தம்!

தேவியிடம் செல்ல முடியவில்லை! 2023ல் இதுபோன்று பாகுபாடு தொடர்வது வேதனையளிக்கிறது - அமலா பால் வருத்தம்!

கேரளாவில் உள்ள திருவைராணிகுளம் மகாதேவர் கோவிலின் உள்ளே செல்ல நடிகை அமலா பாலுக்கு அனுமதி மறுக்கப் பட்டதால், கோவில் பார்வையாளர் டைரியில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள திருவைராணிகுளம் மகாதேவர் கோவிலுக்கு அமலாபால் சென்ற நிலையில், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, 'இத்தகைய பாகுபாடு 2023ல் தொடர்வது வருத்தமும் ஏமாற்றமும் அளிக்கிறது. மத பாகுபாடுகளில் மாற்றம் வரும் என்று நம்புகிறேன். அவர்களை மனிதர்களாகக் கருதும் காலம் வரும்' என்று அமலாபோல் கோயில் பார்வையாளர் டைரியில் எழுதியுள்ளார்.

அதேநேரம், இந்த விவகாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்துவது தேவையற்றது என்றும், திருவைராணிக்குளம் மகாதேவர் கோயிலில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். முன்னறிவிப்பின்றி அமலா பால் வந்ததாகவும், இந்துக்கள் அல்லாதவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் உடனடியாக அவருக்கு தெரிவிக்கப்பட்டதாக கோயில் செயலாளர் பிரசூன் குமார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வெளியில் இருந்த படி பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், அமலா பால் கோவில் சுவர்களுக்கு வெளியே இருந்து தரிசனம் செய்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com