மஞ்சு வாரியரின் துணிவு !

மஞ்சு வாரியரின் துணிவு !

Published on

துணிவு படத்தில் அஜித்திற்கு இணையாக போல்டான காதா பத்திரத்தில் நடித்திருப்பார் மஞ்சு வாரியார்.

துணிவு படத்தின் முதல் நாள் முதல் காட்சியை கேரளாவில் உள்ள வனிதா பிளக்ஸ் என்ற தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்திருக்கிறார்.

"இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. கேரளாவிலும் அஜித் சாரை பலர் ரசிக்கிறார்கள். தமிழ் ரசிகர்களுடன் சேர்ந்து துணிவு படத்தை பார்க்க நான் ஆர்வமாக உள்ளேன்" என்கிறார் மஞ்சு வாரியர். வரும் இருபதாம் தேதி மஞ்சு வாரியர் நடித்து ஆயிஷா திரைப்படம் வெளியாக உள்ளது.

துணிவு படத்தில் கண்மணி கதா பாத்திரத்திற்கு நேர்மாறாக குணசித்திர கதா பாத்திரத்தில் ஆயிஷா படத்தில் நடித்துள்ளார். வரும் இருபதாம் தேதி மஞ்சு வாரியர் தனது ராதே ஷ்யாம் என்ற நாட்டிய நாடகத்தை நடத்த சென்னை வருகிறார் என்பது குறிப்பிட தக்கது.

logo
Kalki Online
kalkionline.com