டாடா திரைப்படம்
டாடா திரைப்படம்

வசூலை அள்ளி குவிக்கும் டாடா திரைப்படம்!

கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ் நடித்திருக்கும் படம் டாடா. கடந்த சில நாள்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் பலரது வரவேற்பைப் பெற்றிருக்கிறது. நீண்ட நாட்கள் கழித்து ஒரு ஃபீல் குட் படம் பார்த்த உணர்வு வருகிறது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த படத்தின் மூலம் நடிகர் கவினுக்கு நல்ல எதிர்காலம் காத்திருப்பதாக திரைத்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பிக்பாஸ் கவின் நடித்த டாடா திரைப்படம் கடந்த ஒன்பதாம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. சிறிய பட்ஜெட் படத்தில் நடிகர் கவின் நடித்து ரெட் ஜெய்ன்ஸ் நிறுவனத்தால் இந்த படம் வெளியிடப்பட்டது. இதற்கு ரசிகர்களிடையே நல்ல விமர்சனம் கிடைத்தது. இதன் காரணமாக படத்தின் முதல் வார இறுதி வசூல் தமிழக முழுவதும் 5 கோடி ரூபாயை பெற்றுள்ளது. இதன் மூலம் கடந்த வார இறுதியில் அதிக வசூல் பெற்ற படத்தில் டாடா முதலிடத்தில் உள்ளது. டாடா படம் வெளியாகி கவினுக்கு பெரும் திருப்பு முனையை கொடுத்திருக்கிறது எனலாம்.

இதை போன்று கடந்த நான்கு வாரங்களாக முதலிடத்தில் இருந்த வாரிசு திரைப்படம் தற்போது இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த வாரஇறுதியில் வாரிசு திரைப்படம் 2 கோடி ரூபாய் வசூல் பெற்றிருக்கிறது. இதன்மூலம் மொத்த வசூல் தமிழகத்தில் 144 கோடி பெற்றிருக்கிறது. இதேபோன்றுமூன்றாவது இடத்தில் ஆர்.ஜே பாலாஜி நடித்த ரன் பேபி ரன் திரைப்படம் வார இறுதியில் ஒன்றரை கோடி ரூபாய் வசூலை பெற்றிருக்கிறது. மொத்தமாக இந்தபடம் தமிழகத்தில் 5 கோடி 50 லட்சம் ரூபாய் வசூலை பெற்று மூன்றாவதுஇடத்தில் இருக்கிறது.

இதேபோன்று நடிகர் அஜித் நடித்து வெளியான துணிவு திரைப்படம் வார இறுதியில் 80 லட்சம் ரூபாய் வசூலை பெற்றிருக்கிறது. மொத்தமாக இந்த படம்தமிழகத்தில் 120 கோடி ரூபாயை நெருங்குகிறது. பாலிவுட் திரைப்படம் ஆனபதான் கடந்த வார இறுதியில் 70 லட்சம் ரூபாயை தமிழகத்தில் பெற்றிருக்கிறது. மொத்தமாக இந்த படம் 21 கோடியே 90 லட்சம் ரூபாயை தமிழகத்தில் பெற்றுஇருக்கிறது.

முதலில் விஜய் , அஜித் படங்கள் பல வாரங்கள் ஓடி ஆன்லைனில் படம் ரிலீஸ் ஆகி இருந்தாலும் இன்னும் வசூல் வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அதையும் மீறி டாடா திரைப்படம் தற்போது வார இறுதியில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com