அண்ணன் செல்வராகவனுடன் மோதும் தனுஷ்!

அண்ணன் செல்வராகவனுடன் மோதும் தனுஷ்!

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் நட்டி நடராஜன் மற்றும் செல்வராகவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் பகாசூரன். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். திரௌபதி ருத்ர தாண்டவம் திரைப்படங்களை இயக்கிய மோகன் .ஜி அடுத்து இயக்கியுள்ள படம் தான் பகாசூரன்.

இப்படத்தின் அறிவுப்பு 2022 ஏப்ரல் 16ல் இணையதள ட்விட்டர் பக்கத்தில் படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியானது.

தம்பி தனுஷின் வாத்தி படத்துடன் அண்ணன் செல்வராகவன் நடிப்பில் உருவாகி உள்ள பகாசூரன் படமும் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேராக மோதவுள்ளது. இந்த இரு திரைப்படங்களும் வரும் பிப்ரவரி 17ம் தேதி அன்று ரிலீஸ் ஆகிறது.

வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வாத்தி என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் ம் உருவாகி உள்ளது. வாத்தி படத்தில் சம்யுக்தா, சமுத்திரக்கனி உட்பட பலர் நடிக்கிறார்கள்.

லாக்டவுன் காலத்தில் சேலம் மாவட்டத்தில் 900க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளை குறி வைத்து நடத்தப்பட்ட ஆன்லைன் மோசடி தான் இந்த பகாசூரன் படம் உருவாகவே காரணம் என்கிறார் மோகன் ஜி. ஆன்லைன் மூலம் நடக்கும் விபச்சாரங்களையும், மசாஜ் சென்டர்கள் பெயரில் கல்லூரி பெண்களை வைத்து நடத்தப்படும் பாலியல் தொழிலையும் அம்பலப்படுத்தும் விதமாக இந்த படம் உருவாகி உள்ளது என ஒரு பேட்டியில் மோகன் ஜி கூறியுள்ளார்.

இது தொடர்பான கேள்விக்கு வாத்தி பெரிய பட்ஜெட் படம் பெரிய பிசினஸ் செய்யும், எங்க படம் சின்ன பட்ஜெட் படம் அதற்கு தேவையான பிசினஸ் செய்யும். இரண்டு படங்களை போட்டி என்று ஒப்பிடுவதே எங்களுக்கான ப்ரோமோஷன் தான் என மோகன் ஜி பதிலளித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com