
நடிகர் தனுஷ் சினிமாவிற்க்கு நடிக்க வந்து இன்றுடன் இருபத்தி ஒன்று வருடங்கள் நிறைவடைந்தது விட்டது. தயாரிப்பாளர்கள், நடிகர்களின் வாரிசுகள் என சினிமா குடும்பத்தினர் பலர் சினிமாவில் ஆதிக்கம் செய்து கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு இயக்குனரின் வாரிசாக சினிமாவில் அறிமுகம் ஆனார் தனுஷ்.
ஏதாவது பரபரப்பான கதை களம் கொண்ட படத்தை எடுத்து தன் மகனை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக துள்ளுவதோ இளமை என்ற பதின்ம வயது கதைக்களம் கொண்ட படத்தில் தன் மகனை அறிமுகம் செய்து இளைஞர்களை திரும்பி பார்க்க வைத்தார் கஸ்தூரி ராஜா. இப்படத்தில் ஒரு டீன் ஏஜ் ஸ்கூல் மாணவன் சந்திக்கும் பிரச்சனையில் சரியான நடிப்பை தந்திருப்பார் தனுஷ். இதற்கு அடுத்த ஆண்டு அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான தேவதையை கண்டேன் திரைப்படம் தனுஷ் என்ற திறமையான நடிகனை உலகிற்கு காட்டியது. இந்த படத்தில் அன்புக்கு ஏங்கும் மனதளவில் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனாக நடித்து ரசிகர்களை சபாஷ் போட வைத்தார்.பின்பு பல்வேறு படங்களில் நடித்து வித விதமான நடிப்பை தந்தார். சத்யராஜிற்கு மணி வண்ணன் அமைந்தது போல், கமலுக்கு பாலசந்தர் அமைந்தது போல் தனுஷிற்கு வெற்றி மாறன் அமைந்தார். வெற்றி மாறன் இயக்கிய பொல்லாதவன் ஆடுகளம்,படங்களில் தனுஷின் ஆடல், பாடல் என துள்ளல் நடிப்பை தந்திருப்பார். இதற்கு நேர் மாறாக வெற்றி மாறன் இயக்கிய அசுரன் படத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு வயதான காதா பாத்திரத்தில் தோன்றி அசத்தி இருப்பார். எழுத்தாளர் பூமணியின் வெக்கை சிறுகதையை மையப்படுத்தி எடுக்க பட்ட அசுரன் படத்தில் சிவசாமியாகவே வாழ்ந்திருப்பார் தனுஷ்.
தனுஷின் முதல் பத்தாண்டு படங்கள் ஒரு சாதாரண இளைஞனின் மனவோட்டத்தை மையப்படுத்திய படங்களாகவே இருக்கும். ஆனால், நடிப்பு துறையில் தனுஷின் அடுத்த 10 ஆண்டுகளில் வந்த படங்கள் சமூக அக்கறை உள்ள படங்களாக இருக்கும். குறிப்பாக, 1995ல் நடந்த உண்மை சம்பவத் தித்தின் அடிப்படையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த கர்ணன் படம் இதற்க்கு மிக சிறந்த உதாரணம். பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்த புதுப்பேட்டை படத்தில் தனுசின் நடிப்பு இன்றளவும் பிரமித்து பார்க்க படுகிறது. இந்த நடிப்பு திறமையை பாலிவுட் வரை கொண்டு சென்றவர் அடுத்ததாக ஹாலிவுட் படமான THE GREY MAN படத்திலும் நடித்து சர்வதேச அளவில் கவனம் பெற்றார். துள்ளுவதோ இளமை படத்தில் மாணவனாக அறிமுகம் ஆனவர் இன்று வாத்தி என்று நடிப்பு வாத்தியாராக உயர்ந்து நிற்கிறார். இன்னமும் தனுஷின் நடிப்பில் பல்வேறு பரிணாமங்களை காண தயாராவோம்.