நடிகர் தனுஷின் 51வது திரைப்படத்தில் அரசியல் கட்சி தலைவராக நடித்து இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷின் 50வது திரைப்பட பணிகள் தற்போது முடிவடைந்து இருக்கின்றது. இந்த நிலையில் தன்னுடைய 51வது படம் குறித்த ஆலோசனையில் தனுஷ் தற்போது நடத்தி முடித்து கதையை தேர்வு செய்திருக்கிறார்.
இந்த நிலையில் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தன்னுடைய 51 வது படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளார். இந்த திரைப்படம் அரசியல் கதைக்களத்தை உள்ளடக்கியதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
மேலும் 40 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற அரசியல், சமூக கதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக இருக்கிறதாம்.இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் ரஸ்மிகா மந்தனா இப்படத்தில் நடிக்க தற்போது ஒப்பந்தமாகியுள்ளார்.
படத்தின் நடிக்கக்கூடிய பிற நடிகர், நடிகைகளை தேர்வு செய்யக்கூடிய பணியை தற்போது படக்குழுவினர் தீவிரமாக முன்னெடுத்து வருகிறார்கள். விரைவில் படத்திற்கான முதல் கட்ட பணிகள் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.
நடிகர் தனுஷ் ஏற்கனவே கொடி என்ற பாடத்தில் அரசியல்வாதிகளிடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் தன்னுடைய புதிய படத்தில் அரசியல் கட்சியினுடைய தலைவராக நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. 2024 தேர்தல், நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தினுடைய தொடர் அரசியல் செயல்பாடுகள் ஆகியவை தற்போது முக்கிய செய்தியாக மாறி இருக்கக்கூடிய நிலையில் அரசியல் கட்சித் தலைவராக நடிகர் தனுஷ் நடிக்க இருப்பது அரசியல் வட்டாரத்திலும் பேசு பொருளாக மாறி உள்ளது.