நடிகர் விஜய் உடன் மீண்டும் கைகோர்க்கும் அட்லீ!

Vijay and Atlee
Vijay and Atlee

யக்குனர் அட்லீ நடிகர் விஜய் வைத்து தமிழில் மூன்று வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இந்த நிலையில் நான்காவதாக புதிய படத்தில் இணைய உள்ளதாகவும் ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

இயக்குனர் அட்லீ தமிழ் மட்டுமல்லாது இந்தியிலும் ஆதிக்கம் செலுத்து தொடங்கி இருக்கிறார். மேலும் அட்லீயின் திரைப்படங்கள் அதிக அளவிலான வசூலை ஈட்டி சாதனை படைத்து வருவது தொடர் கதையாக மாறிவிட்டது. இதனால் இந்திய திரையுலகில் அட்லீ தற்போது முக்கிய இயக்குனர்களில் ஒருவராக உருவாகி வருகிறார்.

இந்த நிலையில் இயக்குனர் அட்லீ தற்போது பாலிவுட்டில் திரைப்படங்களை இயக்க அதிகாரம் செலுத்தி வருகிறார். அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக் கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூலி ஈட்டி சாதனை படைத்திருக்கிறது. மேலும் ஹிந்தியில் வருண் தவானை வைத்து தெறி படத்தை ரீமேக் செய்து வருகிறார்.

இந்த நிலையில் ஜவான் திரைப்படத்தை மும்பையில் உள்ள ஒரு திரையரங்கில் ரசிகர்களுடன் இணைந்து பார்த்தார். பிறகு விஜயின் ரசிகர் ஒருவர் இயக்குனர் அட்லீயிடம் மீண்டும் விஜயுடன் இனிய வாய்ப்பு இருக்கிறதா ? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு விரைவில் நாங்கள் இருவரும் இணைந்து புதிய அறிவிப்பை வெளியிடுவோம் நிச்சயமாக என்று கூறினர்.

அதே நேரம் அட்லீ பல்வேறு நடிகர்களை வைத்து படம் எடுத்து இருந்தாலும் நடிகர் விஜயுடன் இணையும் படங்கள் முக்கிய பேசுபொருளாக மாறுவதோடு அட்லீக்கான புகழையும் உயர்த்துகிறது. இவ்வாறு இவர்கள் இருவரும் இணைந்து தெறி, மெர்சல், பிகில் என்று மூன்று வெற்றி படங்களை தந்துள்ளனர். இதனாலேயே விஜய் அட்லீ கூட்டணி போதும் பேசு பொருளாக இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com