சீனு ராமசாமி இயக்கத்தில் புதிய படம் : அப்டேட்!

Seenu ramaswamy
Seenu ramaswamy

யக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் புதுமுக நடிகர்களை வைத்து உருவாக உள்ள படத்திற்கு கோழிப்பண்ணை செல்லதுரை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அது குறித்த புதிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

இயக்குனர் சீனு ராமசாமி விருதுகளின் இயக்குனர் அழைக்கப்படுபவர். இவர் இயக்கும் படங்கள் சமூக கருத்துக்களை உள்ளடக்கியதாகவும், எதார்த்தமான வாழ்க்கை சூழலை காட்சிப்படுத்தியதாகவும் பெரும்பான்மையாக இருக்கும். மேலும் சீனு ராமசாமி பல புதுமுக நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்துவதில் தற்போது உள்ள முதன்மை இயக்குனர்களின் ஒருவராக இருக்கிறார்.

தமிழ் திரை உலகின் தற்போதைய உச்சபட்ச நட்சத்திரமாக வளம் வரும் நடிகர் விஜய் சேதுபதியை தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக சீனு ராமசாமி அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு தர்மதுரை, கண்ணே கலைமானே போன்ற திரைப்படங்கள் சீனு ராமசாமிக்கு மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்று தந்தது. அதன் தொடர்ச்சியாக சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன் திரைப்படம் பல்வேறு விருதுகளை பெற்று சாதனை படைத்தது.

இந்த நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி தற்போது புதுமுக நடிகர், நடிகைகளை வைத்து எடுக்க உள்ள திரைப்படத்திற்கு கோழிப்பண்ணை செல்லதுரை என்று பெயர் வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படம் கிராமத்து கதைக்களத்தில் உருவாகும் காதல் கதையாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. படத்திற்கு எம்.ஆர்.ரகுநாதன் இசையமைக்கிறார். மேலும் திரைப்படத்தை விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கான தயாரிப்பு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று படக்குழுவின் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. தற்போது படத்தின்னுடைய நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறதாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com