இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்து வந்த பாதை!

இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்து வந்த பாதை!

தமிழ்நாட்டில் முன்னணி இயக்குனர்களில் உருவாக உள்ள விக்னேஷ் சிவன் திரைப் பயணங்கள் முதல் குடும்ப வாழ்க்கை வரை பற்றி பார்ப்போம்.

1983 செப்டம்பர் 18ஆம் தேதி சென்னையில் பிறந்தவர் விக்னேஷ் சிவன். சிறு வயது முதலே திரைப்படங்கள் மீது ஆர்வம் கொண்டதால் தன்னுடைய முழு நேர பணியாகவும் திரை துறையை தேர்வு செய்தார்.

இதன் தொடர்ச்சியாக 2007 ஆம் ஆண்டு சிவி திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் நடிகராக அறிமுகமானார். விக்னேஷ் சிவன் பிறகு இயக்குனர், பாடலாசிரியர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என்று பன்முக பரிணாமங்களை எடுத்தார். 2012 ஆம் ஆண்டு நடிகர் சிம்புவை வைத்து வெளியான போடா போடி திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். அதற்கு முன்பே தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகர்களை வைத்து ஆல்பம் பாடல்களை எடுத்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, நயன்தாராவை வைத்து நானும் ரவுடிதான் படம் இயக்கினார். அந்தப் படத்தின் மூலம் இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா இடையே காதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டு, 2022 அக்டோபர் ஒன்பதாம் தேதி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

மேலும் 2018 ஆம் ஆண்டு வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்குனர். பிறகு பட்டதாரி படத்திலும் சிறப்பு தோற்றத்தில் விக்னேஷ் சிவன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைத்துறையில் ஆர்வம் செலுத்திக் கொண்டிருந்த விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாராவை திருமணம் செய்த பிறகு புதிய தொழில்கள் தொடங்க ஆரம்பித்தார். தற்போது சிங்கப்பூரில் நயன் ஸ்கின் என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளார். மேலும் விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதிக்கு உலகு, உயிர் என்ற இரட்டை ஆண் குழந்தை உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com