"தாடியுடன் இருந்தால் டைரக்டருக்கு பிடிக்காது" - பாக்யராஜ்!

"தாடியுடன் இருந்தால் டைரக்டருக்கு பிடிக்காது" - பாக்யராஜ்!

எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் பாக்கியராஜ் அவர்கள் கதை சொல்வது வழக்கம். ஆனால் இப்போதெல்லாம் பாக்கியராஜ் மேடையில் தனது வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை சொல்லி வருகிறார்.

மித்ரன் R.ஜவகர் இயக்கத்தில் அறிமுக நாயகன் ஈஷான் நடிக்கும் அரியவன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடை பெற்றது. ஜேம்ஸ் வசந்தன் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். "இப்போது தாடி வைத்திருந்தால்தான் ஹீரோ. எங்கள் காலத்தில் தாடியே இருக்க கூடாது. எங்கள் டைரக்டர் (பாரதிராஜா ) தாடி இருந்தால் திட்டுவார். ஷூட்டிங் நடக்கும் போது காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து சவரம் செய்பவரை தேடி சென்று தினமும் சவரம் செய்வேன். ஒரு ஹீரோவுக்கு சவரம் செய்கிறோம் என்ற மகிழ்ச்சி சவரம் செய்பவருக்கு. இது ஒரு சில நாள்தான். அடுத்த சில நாட்களில் அதிகாலை கதவை தட்டும் போது "சார் உங்களுக்கு தான் வேலை இல்லை. நான் நைட் வேலையை முடித்துவிட்டு ரொம்ப லேட்டா வந்து தூங்குறேன் என்று கொஞ்சம் கோபப்பட்டார். இந்த மாதிரி பல நடைமுறை சிக்கல் எல்லாம் ஸ்பாட்டில் வரும்.

இப்போதெல்லாம் பாடல் காட்சிகளில் பாட்டு ஒரு சைடில் போகுது. ஹீரோ - ஹீரோயின் அவங்க பாட்டுக்கு தன் வேலையை பார்க்குறாங்க. எங்க டைரக்டர் லிப் மூவ்மென்ட் சரியா இருக்கணும்னு எதிர்பார்ப்பார். "வான் மேகங்களே வாழ்த்துங்கள் என்ற வரியை பாட கொஞ்சம் கூச்சப் பட்டுகிட்டு வாயை மட்டும் அசைத்தேன்.எங்க இயக்குந ர் ஒழுங்கா வாயை திறந்து பாடு என்று சொன்னதுக்கு அப்புறம் சத்தமாக பாடினேன் என்றார் பாக்கியராஜ்.  பழைய நிகழ்வுகளை பேசி   ரெட்ரோ நாளாக பாக்கியராஜ் மாற்றியது பலரையும் கவர்ந்திருந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com