தீபாவளி ஜாக்பாட் பரிசு என் பெண் குழந்தை: பூரிக்கும் யோகி பாபு!

யோகி பாபு - மஞ்சு பார்கவி
யோகி பாபு - மஞ்சு பார்கவி

‘’இந்த வருஷம் எனக்குக் கிடைச்ச ஜாக்பாட் தீபாவளி பரிசு, எனக்குப் பிறந்த பெண் குழந்தைதான்.. அந்த மகாலட்சுமியே எனக்கு குழந்தையா வந்து பிறந்திருக்கா..’’ என்று பூரிப்புடன் சொல்கிறார், நடிகர் யோகி பாபு.

ஆம்.. யோகி பாபுவுக்கு தீபாவளிக்கு முந்தைய நாள் (அக்டோபர் 23)  காலையில்  அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

நகைச்சுவை நடிகராக தொடங்கி, கதாநாயகனாகவும் களம் இறங்கியுள்ளார் யோகி பாபு, அடுத்தகட்டமாக தற்பொழுது எழுத்தாளராகவும் தன்னை மேம்படுத்திக் கொண்டு பன்முகக் கலைஞராக வெள்ளித்திரையில் உலா வருகிறார்.

கடந்த 2020-ம் ஆண்டு, இவருக்கும் மஞ்சு பார்கவி என்பவருடன் திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் நடந்தது.  இவர்களுக்கு ஏற்கனவே விஷாகன் என்ற ஓர் ஆண் குழந்தை இருக்கிறது. தற்பொழுது இரண்டாவதாக ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இது அவருக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கும் இனிப்பான தீபாவளி செய்தியாக அமைந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com