லால் சலாம் திரைப்படத்தில் வெறும் 7 நாட்கள் நடிக்க ரஜினி வாங்க இருக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘லால் சலாம்’ திரைப்படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் நடிக்க உள்ளார். இந்தத் திரைப்படத்தை அவருடைய மகளான ஐஸ்வர்யா, தானே திரைக்கதை எழுதி இயக்குகிறார்.
கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக்கப்படும் இத்திரைப்படத்தை, லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இத்திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளார்.
இதுவரை ரஜினிகாந்த், ‘பாவத்தின் சம்பளம்’, ‘தாய் இல்லாமல் நான் இல்லை’, ‘நட்சத்திரம்’, ‘அக்னி சாட்சி’ போன்ற 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு தன் மகளுடைய இயக்கத்தில் வெளிவரும் திரைப் படத்தில் அவர் மீண்டும் கௌரவ வேடத்தில் நடிக்கப் போவதை மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
‘பாட்ஷா’ திரைப்படத்தில் முஸ்லிம் கதாபாத்திரத்தில் நடித்ததைத் தொடர்ந்து,
28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இத்திரைப்படத்தில் அவர் ஒரு முஸ்லிமாக நடிக்கப் போகிறார். இத்திரைப் படத்தின் ஆரம்பக்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இவை முடிந்தபிறகு திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். ‘ஜெயிலர்’ திரைப்படம் முடித்த பிறகு, ‘டான்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சிபி சக்கரவர்த்தியின் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்றும் சொல்லப் படுகிறது. இத்திரைப்படத்தையும் லைக்கா நிறுவனம்தான் தயாரிக்க உள்ளார்களாம்.
அது சரி, செய்தியின் தலைப்புக்கும் இதுவரை கொடுத்திருக்கும் செய்திக்கும் சம்மந்தமே இல்லையேன்னு யோசிக்கிறீங்களா? இதோ படியுங்க...
‘லால் சலாம்’ திரைப்படத்திற்கு ரஜினிகாந்த் மொத்தம் 7 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும், இதற்கு அவருக்கு 25 கோடி சம்பளமாக வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. தற்போது சராசரியாக ஒரு திரைப் படத்துக்கு 130 கோடிக்கும் மேல் ரஜினிகாந்த் சம்பளமாக வாங்குகிறாராம். இதன்படி, ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க, அதிக சம்பளம் வாங்கிய ஒரே நடிகர் என்ற சாதனைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
யம்மாடியோவ்!