ஜி20 மாநாட்டில் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு குத்தாட்டம் போட்டது யாரு தெரியுமா?
உலகின் தலைசிறந்த படங்களுக்காக வழங்கப்படும் மிக முக்கிய விருதான ஆஸ்கர் விருது இந்தியப் படங்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்துவந்த நிலையில், அதை தகர்ந்தெறிந்த படம்தான் RRR. இப்படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்கு, சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது.
இப்பாடல் ஆஸ்கர் வென்றது ஒருபுறமிருந்தாலும், இப்பாடலால் உலகளவில் பல ரசிகர்களும் கவரப்பட்டனர். காரணம் அந்தப் பாடலும், அதற்குத் தோதாக அமைந்த நடன ஸ்டெப்புகளும்தான். ராம் சரண், ஜூனியர் என்டிஆர் இருவருமே அந்தப் பாடலில் போட்டி போட்டு ஒரே மாதிரியான அசத்தலான ஸ்டெப்களை போட்டு அனைவரையும் வியக்க வைத்திருந்தனர்.
உலகளவில் இப்பாடலுக்கு ரசிகர்கள் இருக்கும் நிலையில், தென்கொரிய நாட்டிலும் இப்பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தென்கொரிய தூதரக அதிகாரிகள், சில மாதங்களுக்கு முன் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஸ்டெப் போட்டு வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், அந்த வீடியோவைப் பார்தது பிரதமர் மோடியும் பாராட்டும் விதமாக பதிவிட்டிருந்தார்.
அந்தவகையில், காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் திங்கட்கிழமை ஜி20 மாநாடு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், அதில் நடிகர் ராம் சரணும் கலந்துகொண்டார். அந்த மாநாட்டில், இந்தியாவிற்கான தென் கொரிய தூதர் சாங் ஜே-போக் கலந்துகொண்ட நிலையில், இவரும் ராம்சரணும் மேடையில் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு குத்தாட்டம் ஆடியுள்ளனர்.
இதுகுறித்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.