பிரியா மணியின் 'Dr56'!

Dr56
Dr56

சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் ப்ரியாமணி. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா இயக்கத்தில் ‘கண்களால் கைது செய்’. இந்த படத்துக்கு பிறகு நடிகை ப்ரியாமணிக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் அது ஒரு கனாக்காலம், மது, பருத்திவீரன், மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும், ராவணன், சாருலதா’ என படங்கள்குவிந்தது. ப்ரியாமணி தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி கன்னடம், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம்ப்ரபலமானவர்.

தற்போது பிரியாமணி நடிப்பில் புதிதாக உருவாகி உள்ள படம் ‘DR56’. ஹரி ஹராபிக்சர்ஸ் பட நிறுவனம் இந்த படத்தை கன்னடம் மற்றும் தமிழில் தயாரித்து உள்ளது . படத்திற்கு திரைக்கதை எழுதி தயாரித்தது , நாயகனாக நடித்துஇருக்கிறார் பிரவீன்.

இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது . இதில் கலந்து கொண்ட நாயகி ப்ரியாமணி பேசி இருந்தார் . அதில் ‘சாருலதா’ படத்திற்கு பிறகு தமிழில் நான் நடித்து வெளிவரும் படம் என்பதால் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் .

பிரியா மணி
பிரியா மணி

இந்தக் கதையை இயக்குனர் என்னிடம் சொன்னபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் இது நிஜமாக நடந்த நடந்து கொண்டிருக்கும் சம்பவம். இப்படியெல்லாம் நடக்குமா என்று கேட்டபோது, இயக்குனர் சில புகைப்படங்களை என்னிடம் காட்டினார். அதை பார்த்துவிட்டுநிச்சயமா பெரிய வெற்றி பெறும்னு சொன்னேன். நான் எதிர்பார்த்தபடியே படம்நல்லபடியாக வந்து இருக்கிறது என்று கூறினார் .

இந்த கதையில் நான் நடிப்பதற்கு இரண்டு காரணங்கள் இருந்தது. ஒன்று எனக்கு இதில் ரொம்ப ரொம்ப முக்கியமான ரோல். சிபிஐ அதிகாரியாக நடிக்கிறேன். இன்னொரு காரணம் இந்தப் படத்தில் நாய் ஒன்றும் நடிக்கிறது. எனக்கு விலங்குகள் என்றால் ரொம்பப் பிடிக்கும். அதிலும் நாய் என்றால் ரொம்பவே ப்ரியம். அதனால் கதை கேட்டவுடனேயே ஓகே சொல்லிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com