விஜய் சேதுபதி -  அனுக்ரீத்தி வாஸ்
விஜய் சேதுபதி - அனுக்ரீத்தி வாஸ்

விஜய் சேதுபதியின் 'டிஎஸ்பி'!

Published on

ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் வழங்கும் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள "டிஎஸ்பி" ஒரு தமிழ் நகைச்சுவை திரைப்படம். இப்படத்தை இயக்குனர் பொன்ராம் என்பவர் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். முன்னாள் மிஸ் இந்தியா அனுக்ரீத்தி வாஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் விஜய் டிவி புகழ் மற்றும் ஷிவானி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

டிஎஸ்பி படத்தில் 'நல்லா இருமா' என்ற சிங்கிள் பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. டி. இமான் இசையில் முத்துப்பாண்டியின் வரிகளில் பிரபல பின்னணிப் பாடகர் உதித் நாராயணன் , செந்தில் கணேஷ் மற்றும் மாளவிகா சுந்தர் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர் .

விஜய் சேதுபதியின் "டிஎஸ்பி" திரைப்படம் டிசம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com