நடிகர் சூர்யா 43வது படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா: நியூ அப்டேட்!

நடிகர் சூர்யா 43வது படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா: நியூ அப்டேட்!

டிகர் சூர்யாவின் 43 வது திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மானும், நஸ்ரியாவும் இணைய உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் சூர்யா தமிழ்நாட்டில் சிறந்த நடிகர்களில் ஒருவராக உள்ளார். மேலும் தனக்கென்று தனி ரசிகர் வட்டாரத்தை கொண்டுள்ளதால் சூர்யாவின் படத்தின் எதிர்பார்ப்புகள் எப்போதுமே அதிகம் பேசுபொருளாகும். இந்த நிலையில் தற்போது சூர்யா கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் அப்டேட்டுகள் சூர்யா ரசிகர்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ் திரை உலகின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. மேலும் ஏழாம் அறிவு திரைப்படத்தில் போதிதர்மன் போன்ற புராதான வரலாற்று சிறப்புமிக்க கதாபாத்திரத்தில் கங்குவா திரைப்படத்தில் சூர்யா நடித்து வருவதாகவும் திரை வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த நிலையில் சூர்யாவின் 43 வது படத்திற்கான புதிய அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியான வண்ணம் இருக்கிறது. சூரரைப் போற்று படத்தின் மூலமாக நடிகர் சூர்யாவுடன் இணைந்த சுதா கொங்காரா கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படம் சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் சுதா கொங்காராவுடன் தனது 43 வது படத்தில் நடிகர் சூர்யா இணைய உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கதாநாயகியாக அதீதி ஷங்கர் நடிக்க உள்ளதாக திரை வட்டாரங்களில் பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது நஸ்ரியா இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் நஸ்ரியா திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை பெரும் அளவில் தவிர்த்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் துல்கர் சல்மான் ஒப்பந்தம் ஆகி உள்ளார் என்றும் படக்குழு வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com