எப்புட்ரா... வெளிநாட்டிலிருந்து வெளியான வேற லெவல் புகைப்படம்!
டிடி என செல்லமாக தமிழ் ரசிகர்களால் அழைக்கப்படும் திவ்யதர்ஷினி, நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக, நடிகையாக, என்டர்டெய்னராகவும் வலம் வருபவர். தனது நகைச்சுவை மற்றும் துள்ளலான பேச்சால் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறார்.
படங்களில் நடித்து வந்தாலும், அவரை டிவி ஷோக்களில்தான் பெரும்பாலும் காணமுடியும். அதிலும் தற்போது டிவி ஷோக்களை விட, சினிமா நிகழ்ச்சிகளையே அதிகம் தொகுத்து வழங்கி வருகிறார்.
அதேபோல் சோஷியல் மீடியாக்களில் பிஸியாக இருந்துவரும் திவ்யதர்ஷினியை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2.5 மில்லியன் பாலோவர்கள் பின்தொடர்கிறார்கள்.

இந்நிலையில், அவர் ஒரு வெளிநாட்டு நபருடன் படு ஸ்மார்ட்டாக இருக்கும் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.


அந்த புகைப்படத்தில், இத்தாலியன் மாடலான Franco Mazzetti உடன்தான் டிடி அட்டகாசமான புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தைப் பகிர்ந்த அவர், 'மைக்கெலாஞ்சலோ மற்றும் லியோனார்டோ டா வின்சி வாழ்ந்த அழகான நகரமான புளோரன்ஸ் நகரத்தில் உங்களைச் சந்தித்ததில் உண்மையிலேயே பெருமிதம் கொள்கிறேன். இனிய பயணத்தின் போது இதுபோல் சிறந்த மனிதர்களை சந்திப்பது மிகச்சிறந்த பகுதியாகும்' என்று குறிப்பிட்டு அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.