எதிர்பார்ப்பில் எகிரும், 'வால்டேர் வீரய்யா' டீசர்!

எதிர்பார்ப்பில் எகிரும், 'வால்டேர் வீரய்யா' டீசர்!

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நடிப்பில், 'மெகா 154' எனப் பெயரிடப்பட்டு தொடங்கப்பட்ட திரைப்படத்திற்கு, 'வால்டேர் வீரய்யா' எனப் பெயரிடப்பட்டது. இந்நிலையில் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக 'வால்டேர் வீரய்யா' பட டைட்டிலுக்கான டீசரை அந்தப் படக் குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.
சிரஞ்சீவியின் தீவிர ரசிகரும், இயக்குநருமான பாபி எனப்படும்,
கே.எஸ்.ரவீந்திரா இயக்கத்தில் உருவாகும், இந்தப் பட டீசரில், பெரிய கப்பல் ஒன்றில் அமர்ந்திருக்கும் வில்லன், 'வால்டேர் வீரய்யா'வை வார்த்தைகளால் கேலி செய்கிறான். அப்போது சிரஞ்சீவி அங்கே வருகை தந்து, அவரது பாணியில் பதிலடி தருகிறார். சிரஞ்சீவியின் அறிமுகக் காட்சியை இயக்குநர் பாபி, சிறப்பான முறையில் வடிவமைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருப்பதால் இந்தப் பட டீசருக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ பட நிறுவனம் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர் இணைந்து பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரிக்கும் இந்தப் படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். ஆர்தர் ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ஜி.கே.மோகன் மற்றும் எம்.பிரவீண் இணை தயாரிப்பாளர்களாகப் பணியாற்றும் இந்தப் படத்தின் கதை, வசனத்தை பாபி எழுதி இருக்கிறார். இயக்குநர் கோனா வெங்கட் மற்றும் கே.சக்கரவர்த்தி ரெட்டி ஆகியோர் திரைக்கதையை எழுத, கூடுதல் திரைக்கதை மற்றும் வசனத்தை எழுத்தாளர்கள் ஹரி மோகன கிருஷ்ணா மற்றும் வினித் பொட்லுரி எழுதியுள்ளனர். படத்தொகுப்புப் பணிகளை நிரஞ்சன் தேவராமனே கவனிக்க, ஏ.எஸ்.பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.

சிரஞ்சீவி, ரவிதேஜா, மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாராகும் இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு சங்கராந்திக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com