ரஜினி 170
ரஜினி 170

ரஜினியின் 170 படத்தில் இணையும் பிரபல நடிகர்கள்!

டிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள 170 வது திரைப்படத்தில் எந்தந்த நடிகர்கள் நடிக்க உள்ளனர் என்ற தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி 550 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினி தன்னுடைய சம்பளத்தை கூடுதல் படுத்தியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள 170 வது படம் குறித்த புதிய தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன.

மேலும் ரஜினியின் 170வது திரைப்படத்தை ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய பத்திரிக்கையாளர் த.செ. ஞானவேல் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஞானவேல் ஜெய் பீம் படத்தை இயக்கி மிகப்பெரிய வரவேற்பு பெற்றார். மேலும் ஜெய் பீம் திரைப்படம் ஞானவேலை புகழின் உச்சிக்கே அழைத்து சென்றது என்று சொல்லலாம். ஏன் தற்போது தேசிய விருது ஜெய் பீம் திரைப்படத்திற்கு வழங்கப்படாத குறித்து கூட பலரும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அந்த அளவிற்கு ஞானவேல் தன்னுடைய படத்தின் மூலமாக பிரபலமடைந்து இருக்கிறார்.

இந்த நிலையில்தான் நடிகர் ரஜினிகாந்த் த.செ. ஞானவேல் கதைக்கு ஒப்புதல் வழங்கியதாகவும், இதை தொடர்ந்து படப்பிடிப்பு தொடங்குவதற்கான முதல்கட்ட ஆயத்த பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடிக்க இருக்கிறாராம்.

இது மட்டுமல்லாது திரைப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் ஃபஹத் பாசிலும், தெலுங்கு நடிகர் ராணாவும் மற்றும் நடிகையாக துஷாரா விஜயனும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்திற்கு வேட்டை என்று பெயரிடப்பட வாய்ப்பு உள்ளதாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com