பிரபல காமெடி நடிகர் மரணம்... அதிர்ச்சியில் கோலிவுட்!

பிரபல காமெடி நடிகர் மரணம்... அதிர்ச்சியில் கோலிவுட்!
Published on

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக பல வருடங்களாக நடித்துவந்தவர் சிவநாராயண மூர்த்தி. இவர் இதுவரையிலும் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் காமெடி ராேல்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது 67 வயது ஆகும் இவர் நேற்று உடல்நலம் சரியில்லாமல் இறந்துள்ளார்.

பிரபல இயக்குனர் மற்றும் நடிகரான விசுவின் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சிவநாராயண மூர்த்தி.

இவர் விவேக் மற்றும் வடிவேலு உள்ளிட்ட காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்ததில் பல காமெடி காட்சிகள் பிரபலமாகியது. அதுமட்டுமில்லாமல், ஒரு சில சின்னத்திரை தொடர்களிலும் சிவ நாராயணமூர்த்தி நடித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பொன்னவராயன் கோட்டையை சேர்ந்தவரான சிவ நாராயணமூர்த்தியின் மனைவி பெயர் புஷ்பவல்லி. இவருக்கு 2 ஆண் மற்றும் 1 பெண் பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில், தற்போது 67 வயது ஆகும் இவர் நேற்று இரவு உடல்நலம் முடியாமல் இறந்துள்ளார். இறுதி சடங்கு அவருடைய சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் இன்று மதியம் நடைபெறுகிறது.

இச்செய்தியை அறிந்த திரையுலக பிரபலங்கள் பலரும் தங்கள் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com