கமல்ஹாசனுடன் நடித்த பிரபல இந்தி நடிகர் சமீர் காகர் மறைவு!

கமல்ஹாசனுடன் நடித்த பிரபல இந்தி நடிகர் சமீர் காகர் மறைவு!

1980களின் கிளாசிக் திரைப்படங்களில் ஒன்றான ‘ நக்கட்’ திரைப்படத்தின் மூலமாகப் பிரபலமான மூத்த நடிகர் சமீர் காகர், தனது 71வது வயதில் காலமானார்.

புதன்கிழமை அதிகாலையில், உடலில் பல உறுப்புகள் செயலிழந்ததால் மருத்துவமனையில் அவர் மரணமடைந்தார். செவ்வாய்க்கிழமை காலை சில சுவாச பிரச்சனைகளின் காரணமாக மும்பை, போரிவலியில் உள்ள எம்எம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி வயோதிகம் காரணமான உடல்நலக் கோளாறுகளால் அவர் இறந்ததை ஒட்டி நடிகரின் மறைவு செய்தியை அவரது சகோதரர் கன்ஷ் உறுதிப்படுத்தினார்.

ஊடக அறிக்கையின்படி, இன்று காலை சமீர் மயங்கி விழுந்ததாக அவரது சகோதரர் கன்ஷ் கூறினார். நேற்று காலை சமீர் சில சுவாச பிரச்சனைகளை அனுபவித்ததாகவும், அவர்கள் மருத்துவரை அழைத்தபோது, அவர் சமீரை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு கூறினார். "நாங்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம், அவர் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு பல உறுப்புகள் செயலிழந்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 71,'' என்றார் கன்ஷ்.

அவரது மரணம் குறித்து பேசிய ஹன்சல் மேத்தா ட்விட்டரில் ஒரு இதயப்பூர்வமான பதிவைப் பகிர்ந்துள்ளார். அவர் எழுதியதிலிருந்து சில வரிகள், "சில காரணங்களுக்காக, நுக்காட்டில் அவரது சிக்நேச்சர் கதாபாத்திரத்தின் மூலம் கல்லூரியில் கோப்டி என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டேன் நான். அப்போதைய எனது நெருங்கிய நண்பர்கள் இன்னும் என்னை கோப்டி என்று தான் அழைக்கிறார்கள். ஆனால் சமீருக்கு விடைபெற வேண்டிய நேரம் இது என்று நினைக்கிறேன். குட்பை, சமீர் காகர். நீங்காத நினைவுகளுக்கு நன்றி." என்று ஒரு பதிவை பகிர்ந்திருக்கிறார்.

காகர் நடித்ததில் மறக்கமுடியாத பாத்திரம் என்றால், அது 1987 ல் வெளிவந்த புஷ்பக விமானம் என்று சொல்லலாம். கமல்ஹாசன் ஹீரோவாக நடித்த இந்த திரைப்படத்தில் உரையாடலே கிடையாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com