ரஜினியுடன் இணையும் பிரபல முன்னணி நடிகை!

ரஜினியுடன் இணையும் பிரபல முன்னணி நடிகை!

சூப்பர் ஸ்டாரின் நடிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கும் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், அவ்வப்போது படத்தின் அப்டேட்களும் வந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது 'ஜெயிலர்' படத்தில் ரஜினியுடன் முன்னணி கதாநாயகி ஒருவர் இணைந்துள்ளார்.

'அண்ணாத்தே' படத்தைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் நடிக்கும் படம் 'ஜெயிலர்'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க படப்பிடிப்பு வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இப்படம் 2023 தமிழ்ப்புத்தாண்டு அன்று வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு பக்கம் படப்பிடிப்பு வேலைகள் நடந்துகொண்டிருந்தாலும், 'ஜெயிலர்' படத்தின் அறிவிப்புகள் அவ்வப்போது வெளிவந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து வருகிறது.

அந்தவகையில் தற்போது, 'ஜெயிலர்' படத்தில் ரஜினியுடன் பிரபல முன்னணி நடிகையான தமன்னா இணையவிருக்கிறார் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. அவர் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com