அஜித்துக்கு மகளாக நடித்த அனிகா மரணமா!?
2007ம் ஆண்டு 'சோட்டா மும்பை' என்ற மலையாளப் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன்.
ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் மட்டுமே நடித்துவந்த அனிகா, தமிழில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான 'என்னை அறிந்தால்' படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படத்தில் அஜித்தின் மகளாக அனிகா நடித்திருந்த நிலையில், இருவருக்குமான அப்பா மகள் கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது.
இதையடுத்து மீண்டும் அஜித், நயன்தாரா நடிப்பில் வெளியான 'விஸ்வாசம்' படத்திலும் அஜித்தின் மகளாக நடித்து அனைவரையும் கவர்ந்த நிலையில், ரசிகர்களால் அஜித்தின் மகளாகவே கொண்டாடப்பட்டார்.

அடுத்தடுத்து சில படங்களில் மகள் கதாபாத்திரத்தில் அவர் நடித்துவந்த நிலையில், தற்போது கதாநாயகியாகவும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.
தெலுங்கில் 'புட்ட பொம்மா', மலையாளத்தில் 'ஓ மை டார்லிங்' திரைப்படங்களில் கதாநாயகியாக அறிமுகமான நிலையில், இப்படங்கள் பரவலான வெற்றியைப் பெற்றது.

தற்போது தமிழில் 2 படத்திலும், மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அனிகா இறந்துவிட்டதாக ஒரு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவிய நிலையில், ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

அதில் செல்வி நந்தினி என்ற பெயருடன் அவருடைய புகைப்படம் இடம்பெற்று அந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அமைந்துள்ளது.
அனிகாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்களுக்கு, பின்னர் இந்த போஸ்டர் ஒரு படத்திற்காக ஒட்டப்பட்ட போஸ்டர் என தெரியவர, அனைவரும் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர்.