பொங்கலுக்கு  டிவியில் ஒளிபரப்பாக உள்ள மொத்த படங்களின் லிஸ்ட்...

பொங்கலுக்கு டிவியில் ஒளிபரப்பாக உள்ள மொத்த படங்களின் லிஸ்ட்...

பொங்கல் டிஆர்பி-காக அடித்துக்கொள்ளும் 5 சேனல்கள்..

விஜயின் ‘வாரிசு’ படத்துக்கு போட்டியாக நடிகர் அஜித்தின் ‘துணிவு’ படமும் 11ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இதனால் இரண்டு நடிகர்களின் ரசிகர்களுக்கு இடையே போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முன்னணி நடிகர்களின் படங்களின் மோதலை போலவே முன்னணி சேனல்களிலும் பொங்கலுக்கு எந்த நடிகரின் படம், எந்த தேதியில், எந்த நேரத்தில் ஒளிபரப்புவது என்ற போட்டி நடந்து கொண்டிருந்தது. ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.

போட்டிப்போட்டுக் கொண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொலைக்காட்சிகள் தாங்கள் வாங்கியுள்ள படங்களை ஒளிபரப்ப போகிறார்கள். எந்த சேனலில் என்னென்ன படங்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.

சன் டிவி: 

ஜனவரி 15 பொங்கலன்று மாலை 6.30 மணிக்கு தனுஷ் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வெளியான ‘திருச்சிற்றம்பலம்‘ படமும், ஜனவரி 16 ஆம் தேதி மாட்டு பொங்கலன்று மாலை 6.30 மணிக்கு விஷாலின் ‘லத்தி‘ திரைப்படமும் ஒளிபரப்பபட உள்ளது.

 விஜய் டிவி:

பல துறைகளைச் சார்ந்தவர்கள், சினிமா, சின்னத்திரை பிரபலங்களை வைத்து பல சிறப்பு நிகழ்ச்சிகளை தயாரித்து வைத்திருக்கிறது, அதை பொங்கலன்று ஒளிபரப்ப உள்ளது. ஜனவரி 15 பொங்கலன்று காலை 10.30 மணிக்கு விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்‘, மதியம் 2 மணிக்கு இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த ‘காந்தாரா‘, மாலை 4 மணிக்கு ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்‘ போன்ற பிரம்மாண்ட படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளது.

அடுத்த நாள் மாட்டுப்பொங்கலன்று காலை 10.30 மணிக்கு அருண் விஜய் மற்றும் அவரது மகன் இணைந்து நடித்த ‘ஓ மை டாக்‘, மதியம் 12.30 மணிக்கு கார்த்தியின் ‘விருமன்‘, மாலை 4.00 மணிக்கு கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 450 கோடிக்குமேல் வசூல் செய்த ‘விக்ரம்‘ படம் ஒளிபரப்பப்பட உள்ளது.

கலைஞர் டிவி :

படம் வாங்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த கலைஞர் டிவி தற்போது உதயநிதியால் படங்கள் தானாகவே சேனலின் கையில் வந்திருக்கிறது. இதனிடையே பொங்கலன்று மதியம் 1.30 மணிக்கு பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்த ‘லவ் டுடே’ படம் ஒளிபரப்பப்பட உள்ளது. அடுத்த நாள் மாலை 6.30 மணிக்கு சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு‘ படம் ஒளிப்பரப்பப்பட உள்ளது.

 கலர்ஸ் தமிழ்:

ஒன்னு, ரெண்டு சீரியலை வைத்து சேனல் நடத்தி வரும் கலர்ஸ் தமிழ் டிவி, இந்தாண்டு பொங்கலுக்கு அதர்வாவின் ட்ரிகர் படத்தை ஒளிபரப்ப உள்ளது. இந்த படம் ஜனவரி 15 ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பட உள்ளது.

ஜீ தமிழ்: 

நடிகர் சசிகுமாரின் நடிப்பில் வெளியான ‘காரி’ படத்தை வரும் ஜனவரி 16 ஆம் தேதி மாட்டுப் பொங்கலன்று மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பப்பட உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com