மீண்டும் மீண்டும் வில்லனாக நடிக்கும் கௌதம் மேனன்! இப்போ எந்தப்படம் தெரியுமா?

மீண்டும் மீண்டும் வில்லனாக நடிக்கும் கௌதம் மேனன்! இப்போ எந்தப்படம் தெரியுமா?

2001ம் ஆண்டு 'மின்னலே' படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் கௌதம் வாசுதேவ் மேனன். பிரபல இயக்குநராக வலம் வந்தாலும் தற்போது படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் இதுவரையிலும் 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய நிலையில், 'மின்னலே', 'காக்க காக்க', 'வேட்டையாடு விளையாடு', 'வாரணம் ஆயிரம்', 'என்னை அறிந்தால்', 'வெந்து தணிந்தது காடு' என பெரும்பாலான படங்களும் ஹிட் படங்களாகவே அமைந்தது.

அவரது இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'துருவ நட்சத்திரம்', சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு 2' படங்கள் உருவாகி வருகிறது.

இந்நிலையில், அவர் படங்களை இயக்கி வந்தாலும், அவ்வப்போது படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்து அசத்தி வருவதை வழக்கமாக வைத்திருந்தார். இதையடுத்து, சமீப காலமாகவே பல படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார்.

ஜி.வி. பிரகாஷ் நடித்த 'செல்ஃபி', ரிச்சர்ட் ரிஷி நடித்த 'ருத்ர தாண்டவம்', சந்தீப் கிஷன் நடித்த 'மைக்கேல்', சிம்புவின் 'பத்து தல' உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்த நிலையில், மீண்டும் கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு படத்தில் வில்லனாக களமிறங்க உள்ளார்.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் ஆர்கே செல்லுலாய்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படம்தான் 'ஹிட்லிஸ்ட்'. சூரியகதிர் மற்றும் கார்த்திகேயன் என்ற இருவர் இணைந்து இந்த படத்தை இயக்கி வருகின்றனர். இவர்கள் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவிய இயக்குநர்களாக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் மூலம் பிரபல இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா முதன்முதலாக கதாநாயகனாக அறிமுகிறார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமாரும் நடிக்கவிருக்கும் நிலையில், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். சமீபத்தில்தான் இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டது.

கிட்டத்தட்ட படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டு, தற்போது படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com