ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாகும் கெளரி ஜி.கிஷன்!
96 திரைப்படத்தில் சின்ன வயசு திரிஷாவாக நடித்த கெளரி கிஷனை அடுத்ததாக விஜயின் மாஸ்டரில் பார்த்தோம். அதில் கல்லூரி மாணவியாக நடித்திருந்தார். பிறகு தமிழில் படங்கள் எதுவும் நடித்திராத நிலையில் தற்போது ஜி.வி பிரகாஷ் ஜோடியாக நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. சயின்ஸ் ஃபிக்ஸன் பிளஸ் ரொமாண்டிக் ஜானர் திரைப்படமான அந்தப்புதிய படத்தை இயக்கவிருப்பது விக்னேஷ் கார்த்திக். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான “திட்டம் இரண்டு” தான் அவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம். அது ஒரு ஜாலியான ஃபீல் குட் மூவி. அதன் பிறகு இது அவரது இயக்கத்தில் வெளியாகவிருக்கும் 2 வது திரைப்படமாக அமைகிறது.
இதில் கெளரி ஜி.கிஷன், ஜி.வி பிரகாஷ் தவிர இயக்குநர் வெங்கட் பிரபு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்கிறார்கள். அவர்களுடன் மிர்ச்சி விஜய் கெளரவத் தோற்றத்தில் நடிக்கவிருக்கிறாராம். இவர்கள் தவிர மேலும் சில அனுபவமிக்க மூத்த நடிகர்களும் கூட இந்தப்படத்தில் உண்டாம்.
படத்தின் இசை ஜஸ்டின் பிரபாகர்
ஒளிப்பதிவு கோகுல் பினாய்
குற்றம் கடிதல் திரைப்பட இயக்குநரான சிஎஸ் பிரேம் குமாரின் உதவியாளரான முத்தையன் என்பவர் எடிட்டிங் பொறுப்புகளைக் கையாளவிருக்கிறார் எனத் தகவல்.
இந்தத் திரைப்படத்துக்கான படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தகவல்.