போயஸ்கார்டன் வீட்டில் தனுஷ் கிருஹப் பிரவேசம்… மனைவி, குழந்தைகள் மிஸ்ஸிங்!

போயஸ்கார்டன் வீட்டில் தனுஷ் கிருஹப் பிரவேசம்… மனைவி, குழந்தைகள் மிஸ்ஸிங்!

நடிகர் தனுஷ் போயஸ் கார்டனில் புது வீடு கட்டிக் கொண்டிருந்தார் என்பது பழைய செய்தி. இப்போது அந்த வீட்டில் கிருஹப் பிரவேசம் நிறைவடைந்தது என்பது புதிய செய்தி.

தனுஷ், ஐஸ்வர்யா பிரிவதாக அறிவிப்பு வெளி வருவதற்கு முன்பே போயஸ்கார்டனில் 150 கோடி செலவில் ஆடம்பரமாக பங்களா ஒன்று கட்டிக் கொண்டிருந்தார் தனுஷ். அந்த வீட்டின் கிருஹப் பிரவேசம் நேற்று நடந்து முடிந்ததாக இணைய ஊடகங்களில் செய்திகள் கசிந்துள்ளன. கிருஹப் பிரவேச விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில் அவற்றில் தனுஷின் பெற்றோர் மற்றும் சகோதரர் செல்வராகவன், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இடம்பெற்றுள்ளளார்கள். ஆனால் தனுஷின் குழந்தைகளான யாத்ரா மற்றும் லிங்கா இடம்பெறவில்லை என்பது தற்போது பேசுபொருளாகியிருக்கிறது.

தனுஷ், ஐஸ்வர்யா கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாகக் கடந்த ஆண்டு அறிவித்திருந்தனர். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா குடும்பத்தினர் அவர்கள் இருவரையும் மீண்டும் சேர்ந்து வாழ வைக்க விருப்பம் கொண்டிருந்த நிலையில் தம்பதியினர் இருவரும் அதற்கு மனமொப்பியதாகத் தகவல் இல்லை. இந்நிலையில் போயஸ் கார்டனில் தான் கட்டிக் கொண்டிருக்கும் 150 கோடி ரூபாய் ஆடம்பர பங்களா வேலைகளில் மூழ்கி தனுஷ் இடைவெளியின்றி தொடர்ந்து திரைப்படங்களிலும் வெப் சீரிஸிலும் கூட நடித்துக் கொண்டே இருந்தார்.

தற்போது தனுஷ் நடிப்பில் ‘வாத்தி’ திரைப்படம் வெளியாகி இருக்கிறது. ஐஸ்வர்யா ’லால் சலாம்’ பட வேலைகளில் மூழ்கி இருக்கிறார்.

குழந்தைகள் யாத்ரா, லிங்கா இருவரும் ஐஸ்வர்யாவுடன் இருந்தாலும் தனுஷ் தன் குழந்தைகளைச் சந்தித்து அவ்வப்போது அவர்களுடன் குவாலிட்டி டைம் செலவிட்டு வருவதாகத் தகவல். வாத்தி பட விழாவில் கூட தன் மகன்களே தனக்கு மிகச் சிறந்த தோழர்கள் என்று கூறி இருந்தார் தனுஷ்.

இந்நிலையில் தனுஷின் 150 கோடி ரூபாய் ஆடம்பர பங்களா கட்டி முடிக்கப்பட்டு நேற்று கிருஹப் பிரவேசமும் ஆன நிலையில். ஆத்மார்த்தமான அந்த நிகழ்வில் தனுஷின் குழந்தைகள் இடம் பெறவில்லை என்பது ரசிகர்களிடையே கேள்வியாகி இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com