இரட்டை வேடத்தில் ஹன்சிகா!

ஹன்சிகா
ஹன்சிகா

2010 ஆம் ஆண்டு 'சேட்டை' படத்திற்கு பிறகு இயக்குநர் ஆர் கண்ணனுடன் மீண்டும் ஒருமுறை இணைகிறார் நடிகை ஹன்சிகா. சமீபத்தில் இந்த படத்திற்கு 'காந்தாரி' என்று பெயர் சூட்டப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகின . இந்த படத்தில் ஹன்சிகா இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். மெட்ரோ சிரிஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மயில்சாமி, தலைவாசல் விஜய், பிரிஜிதா, பவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பாலசுப்ரமணியன் ஒளிப்பதிவு செய்ய ஸ்டண்ட் சில்வா ஆக்‌ஷன் காட்சிகளை கையாண்டுள்ளார். எல்வி முத்து கணேஷ் இசையமைத்துள்ளார். எம்.ஏ.தொல்காப்பியனின் கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு தயாரிப்பாளர் ஜி தனஞ்செயன் திரைக்கதை எழுதியுள்ளார். மசாலா பிக்ஸ் புரொடக்‌ஷன் பேனரில் ஆர் கண்ணன் தயாரித்துள்ளார்.

காந்தாரி
காந்தாரி

எமோஷனல் மற்றும் ஹாரர் காமெடி கலந்த த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. நரிகுரவ சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட கதைக்களம்.

'காந்தாரி' படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்த படம் பிப்ரவரி 24 திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com