சாவித்ரிக்கு நேர்ந்தது தான் இந்தி நடிகர் ராஜ்கபூருக்குமா?

சாவித்ரிக்கு நேர்ந்தது தான் இந்தி நடிகர் ராஜ்கபூருக்குமா?

பாலிவுட்டில் பெயர் போனது கபூர் குடும்பம். கொள்ளுத்தாத்தா ப்ரித்விராஜ் கபூர் தொடங்கி தாத்தா ராஜ்கபூர் அப்பா சசிகபூர், பெரியப்பா ஷம்மி கபூர் என்று குடும்பத்தில் மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே உண்டு. அவர்களில் இன்றைய தலைமுறைக்கான வாரிசு நடிகர் ரந்திர் கபூர். இவர், அலியாபட்டின் கணவர். இவர்களுக்குச் சமீபத்தில் தான் குழந்தை பிறந்திருக்கிறது.

மும்பை செம்பூர் பகுதியில் புகழ்பெற்ற கபூர் குடும்பத்துக்குச் சொந்தமாக 1 ஏக்கர் பங்களா இருந்தது. அதை கோத்ரேஜ் நிறுவனம் 2019 ஆம் ஆண்டில் கபூர் குடும்பத்தின் சட்டப்படியான அதிகாரப்பூர்வ வாரிசுகளின் ஒப்புதலுடன் விலைக்கு வாங்கியது. இந்த பிஸினஸ் டீலிங்கில் எத்தனை கோடி பணம் கை மாறியது என்பது குறித்த தகவல்களை கோத்ரேஜ் நிறுவனம் வெளியிட விரும்பவில்லை. சட்டப்படியும் அது குற்றம் என்பதால் அதைப் பற்றி பேச்சில்லை.

இப்போது இந்த விஷயத்தில் புதிய தகவல் என்னவென்றால் ராஜ்கபூரின் 1 ஏக்கர் ஆடம்பர பங்களாவான ஆர் கே ஸ்டுடியோவை கோத்ரேஜ் நிறுவனம் பிரீமியம் லக்ஸுரி அபார்ட்மெண்ட்டாக மாற்றிக் கட்டவிருக்கிறது. அதற்கான திட்டமதிப்பு சுமார் 500 கோடி என்கிறார்கள்.

கோத்ரெஜ் பிராப்பர்ட்டீஸின் மேனேஜிங் டைரக்டரும், சீஃப் எக்ஸிகியூட்டிவ் அதிகாரியுமான கெளரவ் பாண்டே இது குறித்துப் பேசுகையில் ‘ மும்பையின் பெருமிதமிக்க அடையாளங்களில் ஒன்றான கபூர் பங்களாவை அக்குடும்பத்தினர் எங்களை நம்பி ஒப்படைத்ததில் கோத்ரெஜ் பிராப்பர்ட்டீஸ் பெருமை கொள்கிறது. கடந்தாண்டுகளைக் காட்டிலும் இனி வரும் ஆண்டுகளில் மும்பையில் ப்ரிமியம் அபார்ட்மெண்டுகளுக்கான டிமாண்ட் அதிகரித்துக் கொண்டே செல்வதால் கோத்ரெஜ் இது போன்ற முயற்சிகளில் அதிக கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

இதற்கும் நடிகை சாவித்ரிக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? நடிகை சாவித்ரிக்குச் சொந்தமான ஆடம்பர பங்களா ஒன்று சென்னை, தி.நகர் ஹபிபுல்லா சாலையில் இருந்தது. அதை வருமான வரிக் கடன் பாக்கிக்காக விற்க வேண்டிய நெருக்கடிக்கு உள்ளானார் சாவித்ரி. அப்போது அதை வாங்கியதும் ஒரு வணிக நிறுவனம் தான். அதன் ஒரு பகுதியை லலிதா ஜூவல்லரிக்காரர்கள் வாங்கினார்கள் என சாவித்ரியின் மகள் விஜய சாமுண்டிஸ்வரி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.

இப்போதும் கூட டி.நகர் லலிதா ஜூவல்லரி கடையில் மாடிப்படி ஏறும் இடத்தில் நடிகை சாவித்ரியின் புகைப்படம் ஒன்று மாட்டப்பட்டிருப்பதாகவும் அதை நீக்க லலிதா ஜூவல்லரிக்காரர்கள் ஒப்பவில்லை என்றும் தன் தாயாரின் புகைப்படத்தை அவர்கள் பெருமைக்குரியதாகக் கருதினார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இங்கே ராஜ் கபூர் குடும்பத்தில் பராமரிக்க முடியவில்லை. இவ்வளவு பெரிய ஆடம்பர பங்களாவை நிர்வகிக்க எங்களால் முடியாது என்று கூறி அதன் வாரிசுகள் அத்தனை பேரும் மனம் ஒப்பி இந்த சொத்தை கோத்ரெஜுக்கு விற்றிருக்கிறார்கள். கோத்ரெஜ் பதில் மரியாதையாக தனது இந்த திட்டத்திற்கு புராஜெக்ட் கோத்ரெஜ் ஆர் கே எஸ் (ராஜ் கபூர் ஸ்டுடியோவின் சுருக்கம்) என்று பெயரிட்டிருக்கிறது.

அவ்வளவு தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com