இந்த ஹீரோ தாத்தாவாகிட்டாரா? நம்பவே முடியல...

இந்த ஹீரோ தாத்தாவாகிட்டாரா? நம்பவே முடியல...

தமிழ், மலையாளம், தெலுங்கு என பிரபல திரைப்படங்களில் நடித்து, இளசுகளின் மன்னனாக ஜொலித்து வந்தவர் நடிகர் ரகுமான். இதுவரையிலும் 200 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.

இவரது திரைப்பயணம் 1983ல் மலையாளத் திரையுலகில் ஆரம்பித்தது. இதையடுத்து, தெலுங்கு, பின்னர் தமிழுக்கும் அறிமுகமானார். இதுவரை பல விருதுகளையும் வாங்கியுள்ள ரகுமான், தமிழில் 'புதுப்புது அர்த்தங்கள்' படத்தின் மூலம் இவர் பிரபலமாக அறியப்பட்டார்.

சினிமாவில், அன்றைய காலகட்ட இளசுகளின் மன்னனாக திகழ்ந்தாலும், இன்றும் இவர் பார்ப்பதற்கு அழகு மங்காத மன்னனாகவே தோற்றமளிக்கிறார்.

'சிங்கம் 2', 'குற்றமே தண்டனை', 'துருவங்கள் பதினாறு', 'பகடி ஆட்டம்', 'பொன்னியின் செல்வன்' என இன்றுவரை திரையில் காலூன்றி வருகிறார்.

இந்நிலையில், இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் ருஷ்டா என்ற மகளுக்கு திருமணமான நிலையில், கடந்தாண்டு அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து, தற்போது எட்டு மாதமே ஆன அந்தக் குழந்தையை தனது மடியில் வைத்தபடி ரகுமான் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படத்தைப் பார்த்த பலரும் ரகுமானின் பேரனை வாழ்த்திய நிலையில், ஒரு சிலர் ரகுமான் தாத்தாவாகிட்டாரா என்று ஆச்சரியத்துடனும் தங்கள் கமெண்ட்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர்.

புகைப்படத்தைப் பார்க்கும்போது, ரகுமான் அன்றும் இன்றும் இளமை மாறாமல் ஜெலிப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com