வந்துட்டாருய்யா கார்த்திக் சுப்புராஜ்... இந்த தீபாவளிக்கு வருதாம்! செம அப்டேட்!
'பீட்சா' முதல் 'மகான்' வரை பல வித்தியாசமான கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்து இயக்கி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவர் கார்த்திக் சுப்புராஜ்.
இவரது ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கதையம்சத்தைக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. 'பீட்சா', 'ஜிகர்தண்டா', 'இறைவி', 'பேட்ட', 'மகான்' என ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.
அதேபோல் கதை எழுதுவதிலும் தேர்ந்தவரான இவர், தற்போது ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடித்துவரும் 'கேம் சேஞ்சர்' படத்திற்கான கதையையும் இவர் எழுதியுள்ளார்.
இந்நிலையில் இவரது இயக்கத்தில், நடிகர் சித்தார்த், பாபி சிம்ஹா, லக்ஷ்மி மேனன் நடிப்பில் 2014ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம்தான் 'ஜிகர்தாண்டா'. இந்நிலையில், தற்போது 'ஜிகர்தண்டா டபுள்X' குறித்த அப்டேட் ஒன்றை வீடியோவுடன் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, இப்படத்தில், முதன்முறையாக ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, எஸ்.திருநாவுக்கரசு, ஷாபிக் முகம்மது அலி எடிட்டிங் செய்ய, கார்த்திக் சுப்புராஜ் எழுதி, இயக்கி, தயாரிக்கிறார்.
ஏற்கெனவே வெளியான 'ஜிகர்தண்டா' படம் காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகி நல்ல வரவேற்பைப் பெற்றநிலையில், தற்போது வெளியாகவிருக்கும் 'ஜிகர்தண்டா டபுள்X' படத்தில் ராகவா லாரன்ஸும், எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து நடிப்பதால், இப்படம் வேற லெவலாக இருக்கும் என்றே தோன்றுகிறது. கடந்த வருடமே இப்படத்திற்கான டீஸர் வெளியானது. இந்நிலையில் தற்போது இப்படம் குறித்த ஷாட் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

மேலும் இப்படம் குறித்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இப்படம் வரும் தீபாவளி அன்று திரையரங்கில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.