சூர்யாவின் அந்தப் படத்திலிருந்து வெளியான வீடியோ காட்சி இதோ...

சூர்யாவின் அந்தப் படத்திலிருந்து வெளியான வீடியோ காட்சி இதோ...

கோலிவுட்டில் 'சூரரைப் போற்று', 'ஜெய்பீம்', 'எதற்கும் துணிந்தவன்', 'விக்ரம்' என ஏறுமுகமாக உச்சத்தை நோக்கி போய்க்கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. இந்நிலையில் அவரது அடுத்த படத்துக்கான எதிர்பார்ப்பும் பல மடங்கு எகிறி இருக்கிறது.

இந்நிலையில் அவர் தற்போது 'சிறுத்தை' சிவா கூட்டணியில் தன்னுடைய 42வது படத்தில் நடித்து வருகிறார். 'அண்ணாத்த' படத்திற்குப் பிறகு 'சிறுத்தை' சிவா இயக்கும் படம் என்பது மட்டுமல்லாமல், இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாவதால் மிகுந்த எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பாட்னி நடிக்கிறார்.

இதற்கு முன்னதாக சூர்யா பாலாவின் இயக்கத்தில் 'வணங்கான்' திரைப்படத்தில் நடித்து வந்தார். படப்பிடிப்பும் நடந்து வந்தது. இந்நிலையில் படப்பிடிப்பின் போது இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து சூர்யா அப்படத்திலிருந்து விலகிவிட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் கூறப்பட்டது.

ஆனால், பாலா தரப்பில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறினாலும், சூர்யா இப்படத்திலிருந்து விலகுகிறார் என்று வெளிப்படையாகவே அறிவித்தார்.

இந்நிலையில் அந்தப் படத்தில் சூர்யா நடித்திருந்த ஒரு காட்சி வீடியோவாக தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com