பிரதீப் ரங்கநாதன்
பிரதீப் ரங்கநாதன்

இந்தியில் ரீமேக்காகும் லவ் டுடே திரைப்படம்!

லவ் டுடே திரைப்படத்தின் இந்தி ரீமேக் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி ஹீரோவாக நடித்த லவ் டுடே திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். நடிகை இவானா கதாநாயகியாகவும், ராதிகா சரத்குமார், யோகிபாபு உள்ளிட்டோர் சிறப்பு வேடங்களிலும் நடித்திருந்தனர். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

பிரதீப் ரங்கநாதன் இயக்கிய லவ் டுடே திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்திருக்கிறது. இதற்கு முன்பு பல குறும் படங்களை இயக்கி வெற்றி கண்டவர் தான் இந்த ப்ரதீப் ரங்கநாதன். இவர் ஜெயம் ரவி நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியாகிய கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.

இந்தப் படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ரூ வசூலில் சக்க்கை போடு போட்டது. இப்படம் மொத்தமாக ரூ. 100 கோடி வசூலைக் குவித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் தெலுங்கிலும் இப்படம் வெளியானது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 2-ம் தேதி வெளியாகி ரசிகர்களின் மிக சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி வெளியான இத்திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

லவ் டுடே
லவ் டுடே

இந்த நிலையில் லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான Phanton Studios நிறுவனம் இந்தி ரீமேக் உரிமையை கைப்பற்றியுள்ளது. இந்தப் படம் 2024ஆம் ஆண்டு தியேட்டர்களில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறதுமேலும், இந்தி ரீமேக்கில் ஏஜிஎஸ் நிறுவனமும் இணைந்துள்ளது. விரைவில் படக்குழு குறித்த விவரம் அறிவிக்கப்படும் என அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com