பிரம்மாண்டங்களின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் பற்றி தெரியாத தகவல்கள்!

James Cameron
James Cameron

மிழ் திரையுலகில் பிரம்மாண்ட இயக்குநர் என்றால் இயக்குநர் ஷங்கரைதான் குறிப்பிடுவார்கள்.அதுபோல் உலக சினிமாவில் பிரம்மாண்ட திரைப்படங்களில் பிதாமகர் என்றால் அதற்கு அனைவரும் உச்சரிக்கும் பெயர் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் என்பவரைதான்.

உலகின் முன்னணி இயக்குனர்களின் பெயர்களைப் பட்டியலிட்டால் முக்கிய இடத்தில் இருப்பது இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் பெயர். 16 ஆகஸ்ட் 1954 ஆம் ஆண்டு கனடாவில் பிறந்த இவர் உலகத் திரை உலகின் பிரம்மாண்ட இயக்குனராக பாராட்டப்படுகிறார்.

இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர், ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் தன்மையை கொண்ட இவர் ,இதுவரை மொத்தம் 9 படங்களை மட்டும் இயக்கியுள்ளார். ஆனால், ஜேம்ஸ் கேமரூனோனின் ஒவ்வொரு திரைப்படங்களும் பிரம்மாண்ட மாயாஜலங்களை கொண்டவரை. பொதுவாக அறிவியல் புனைகதைகளை மையப்படுத்தி இவர் எடுக்கும் படங்கள் கற்பனைக்கு எட்டாதவை. 1982ம் ஆண்டு பிரானா 2 எனும் படத்தி இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன். ஆனால், அவருக்கு பெயரையும் புகழையும் கொண்டுவந்து சேர்த்த படம் என்றால் 1984 ஆம் ஆண்டு த டெர்மினேட்டர் படத்தை இயக்கினார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து சாதனை படைத்தது.  முதல் படத்தின் மூலமே உலகம் முழுவதும் ஜேம்ஸ் கேமரூன் பெயர் அறிமுகமானது.

The Terminator
The Terminator

அதன்பிறகு 1997 ஆம் ஆண்டு இவர் இயக்கிய டைட்டானிக் திரைப்படம் வரலாற்று நினைவாகவே மாறி இருக்கிறது. இன்று வரை டைட்டானிக் திரைப்படம் மிக முக்கிய வரலாற்றுச் சான்றாக கருதப்படுகிறது. மேலும் இந்த படம் உலகம் முழுவதும் 2.19 மில்லியன் டாலர்களை வசூலித்தது குறிப்பிடத்தக்கது. இது உலக சாதனையாகவும் கருதப்படுகிறது. மேலும் இந்த இந்தப் படம் பல ஆஸ்கர் விருதுகளையும் பெற்றுள்ளது.அதன்பின்னர், 2009 ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் படம் உலகம் முழுவதும் அதிக வசூலை ஈட்டிய படங்களில் ஒன்றாக உள்ளது. இந்த படம் உலகம் முழுவதும் 2.78 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து சாதனை படைத்துள்ளது. மேலும் இவர் இயக்கிய படங்கள் 6 பில்லியன் டாலர் வரை வசூலித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

Titanic movie
Titanic movie

உலக பொருளாதார அமைப்பு 2011 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிவிப்பின்படி உலகின் மிக அதிக சம்பளம் பெறும் இயக்குனராக ஜேம்ஸ் கேமரூன் இருக்கிறார். 2011 ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் 257 மில்லியன் அமெரிக்க டாலர்களை வருமானமாக பெற்றுள்ளார்.ஜேம்ஸ் கேமரூன் ஹாலிவுட் திரை உலகில் மட்டுமல்லாது உலகம் முழுவதுமே பிரம்மாண்ட இயக்குனர் என்று பாராட்டும் அளவிற்கு புகழ்பெற்றுள்ளார். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com