இளையராஜாவின் புதிய சிம்பொனி

இளையராஜாவின் புதிய சிம்பொனி

ண்டன் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் உலகப் புகழ்பெற்ற ‘ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா’ என்ற இசைக் குழுவினர் இசைக்கும் வண்ணம் இசைஞானி இளையராஜா சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது முதல் சிம்பொனி இசைக் கோர்வையை உருவாக்கி, அவர்களை இசைக்கவும் வைத்து சாதனை படைத்தார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது தமது அடுத்த சிம்பொனியை அளிக்கப் போகிறார்.

ஒரே நேரத்தில் நான்கு கவிஞர்கள், நான்கு கவிதைகளை வாசித்தால் அதைக் கேட்டு, கவிதை இன்பத்தை ரசிக்க முடியுமா? ஆனால், இசைக் குறிப்புகளாக எழுதப்படும் மொழியற்ற கவிதைகள் ஒரே நேரத்தில் வாசிக்கப்பட்டால், அதுதான் சிம்பொனி. இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்வதென்றால், இத்தாலியின் ‘ஓபெரா (opera)இசை நாடகங்களில் சின்ஃபேனியா (Sinfania) என்கிற இசை வடிவம் பயன்படுத்தப்பட்டது. அதன்பின்னர் அது நாடகத்திலிருந்து வெளியேறி கச்சேரி இசையாக விடுதலை பெற்றது. இன்று ஐரோப்பவின் பல நகரங்களில் சிம்பொனி குழுக்கள் இயங்கி வருகின்றன.

சிம்பொனி நிகழ்ச்சிகளுக்கு இசைக்குறிப்புகளை கண்களால்  பார்த்த வண்ணமே கைகளால் இசைகருவிகளை வேகமாக, பலருடன் ஒருங்கிணைந்து இயக்கும் திறன் கொண்ட கலைஞர்கள் அசுர பயிற்சி செய்ய வேண்டும். அவர்களை இயக்க அந்த இசையின் முழுப்பரிமாணங்களை அறிந்த ஒரு “ராஜா” வேண்டும்.

இசையுலகம் ராஜாவின் புதிய சாதனைக்காக காத்திருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com