'இந்தியன் 2' படப்பிடிப்பு : தைவான் ஷூட்டிங்கில் ஷங்கரும், கமலும்! வெளியான மாஸ் புகைப்படம்!

'இந்தியன் 2' படப்பிடிப்பு : தைவான் ஷூட்டிங்கில் ஷங்கரும், கமலும்! வெளியான மாஸ் புகைப்படம்!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல் ஹாசன் நடித்து வரும் திரைப்படம் 'இந்தியன் 2'. இந்த படத்தின் முதல் பாகம், மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, இந்த படத்தின் இரண்டாம் பாகம், எடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்துவருகிறது.

சமீபத்தில், இப்படத்தின் படப்பிடிப்பு, தைவான் நாட்டில் நடக்கவிருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது படப்பிடிப்பு தொடங்கியுள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், தான் படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டிருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமல்ல, கமலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நேற்று முன்தினம், 'Indian in transit 2 Taiwan!' என்று தான் விமான நிலையத்தில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் ஷங்கர் வெளியிட்டுள்ள புகைப்படத்தைப் பார்க்கும்போது, 'இந்தியன் 2' படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் தற்போது தைவானில் துவங்கப்பட்டுள்ளதை உறுதி செய்கிறது.

இயக்குநர் ஷங்கர் ஒரே நேரத்தில் கமல் நடிக்கும் 'இந்தியன் 2' மற்றும் ராம் சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தையும் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 'இந்தியன் 2' திரைப்படம் 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் திரையரங்குகளில் வெளிவரும் எனவும் கூறப்படுகிறது. இப்படத்தில், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், குரு சோமசுந்தரம் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.

கோலிவுட்டில், 'இந்தியன் 2' படத்திற்கு பிறகும் பிஸியாகவே இருக்கும் கமல்ஹாசன் கைவசம், பா.ரஞ்சித் மற்றும் எச்.வினோத் ஆகியோரின் படங்கள் இருப்பதோடு, லோகேஷ் கனகராஜுடன் 'விக்ரம்' படத்தின் தொடர்ச்சி என கமல்ஹாசன் ஒரு ரவுண்ட் வருவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com