நடிகை இலியானா கர்ப்பமா? அவர் போட்ட பதிவால், குழப்பத்தில் ரசிகர்கள்!

நடிகை இலியானா கர்ப்பமா? அவர் போட்ட பதிவால், குழப்பத்தில் ரசிகர்கள்!

தமிழில் 'கேடி', 'நண்பன்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை இலியானா. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது ஹிந்தியில் 'Unfair & Lovely' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதுவரையிலும், தெலுங்கு, ஹிந்தி என நிறைய ஹிட் படங்களையும் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை பதிவிட்டுள்ளார். அதில், 'Coming soon. Can’t wait to meet you my little darling' என்று குறிப்பிட்டு சிறு குழந்தையின் உடையை பகிர்ந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இன்னொரு புகைப்படத்தில், “mama” என்ற எழுத்துள்ள chain ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். இதையடுத்து, இலியானாவின் இந்த பதிவு இணையத்தில் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

அவரது ரசிகர்களும், நலம் விரும்பிகளும் இலியானாவின் பதிவிற்கு அன்போடு, தங்கள் வாழ்த்துக்களை ஒரு பக்கம் கூறினாலும், ஒரு சிலர் குழந்தையின் தந்தையைப் பற்றி அறிய ஆர்வமாக இருக்கிறார்கள். அதிலும் ஒருவர், நீங்கள் திருமணமானவரா? தந்தை யார்? எனவும், அவரது விவரங்களைப் பகிர முடியுமா? எனவும் சிலர் கேட்டுள்ளனர்.

நடிகை இலியானா சில ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியன் புகைப்படக்காரரான ஆண்ட்ரூ நீபோன் என்பவருடன் கிசுகிசுக்கப்பட்டு, பின்னர் 2019ல் இருவரும் பிரிந்தனர் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com