நடிகை பூர்ணா வீட்டில்  இந்த விசேஷமா?

நடிகை பூர்ணா வீட்டில் இந்த விசேஷமா?

நடிகர் பரத் நடித்த ’முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்தில் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. அதன் பிறகு அவர் 'கொடைக்கானல்', 'ஆடு புலி', 'வித்தகன்', 'ஜன்னல் ஓரம்', 'தகராறு', 'சகலகலா வல்லவன்', 'மணல் கயிறு 2', 'கொடிவீரன்', 'அடங்கா மறு', 'காப்பான்', 'லாக் அப்' போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

விரைவில் வெளிவரவிருக்கும் இயக்குனர் மிஷ்கின் 'பிசாசு 2' திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகை பூர்ணா நடித்திருக்கிறார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துபாய் தொழிலாளர் ஆசிப் அலி என்பவரை நடிகை பூர்ணா திருமணம் செய்து கொண்டார். கடந்த டிசம்பர் மாதம் கர்ப்பமானதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார்.

தற்போது அவரது வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "என் வாழ்க்கையின் சிறந்த தருணங்கள்" ,"எனக்கும் என் குழந்தைக்கும் நீங்கள் பொழிந்த அனைத்து ஆசீர்வாதங்களுக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி" என குறிப்பிட்டு வளைகாப்பு நிகழ்ச்சி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com