4வது முறையாக விஜய் படத்தில் இவரா!? நடந்தா ரசிகர்களுக்கு ரெட்டிப்பு சந்தோஷம்தான்!
தளபதி விஜய் தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படத்தில் தற்போது நடித்து வருகிறார். விஜய் ஐம்பது வயது கேங்ஸ்டராக இப்படத்தில், நடிக்கும் நிலையில், இப்படம் முழுவதும் லோகேஷ் கனகராஜ் ஸ்டைலில் உருவாகி வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் மட்டுமே முடிவடைந்துள்ள இப்படத்தின் அப்டேட்களும் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே விஜய்யின் 'தளபதி 68' குறித்த பேச்சுதான் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது.
அதன்படி, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கவிருக்கிறார் என்ற செய்திதான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தான் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும், கிட்டத்தட்ட இச்செய்தி உறுதியாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் ஒரு மாதத்திற்குள் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அவ்வப்போது, விஜய்யின் அடுத்த படம் பற்றிய தகவல்களும் வெளியாகிவரும் நிலையில், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்கவைக்கும் முயற்சியாக, அவரிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் நயன்தாராவின் கால்ஷீட் தற்போது இல்லை என்பதால், அவர் விஜய்யுடன் இணைவது சந்தேகம்தான் எனவும் கூறப்படுகிறது. நயன்தாரா ஏற்கெனவே, விஜய்யுடன் 'சிவகாசி' படத்தில் ஒரு பாடலிலும், 'வில்லு', 'பிகில்' படங்களில் ஜோடியாகவும் நடித்துள்ளார்
இருந்தும், இன்னும் அதிகாரப்பூர்வ விஷயங்கள் எதுவும் வெளிவராத நிலையில், நயன்தாரா இதில் நடிப்பாரா, இல்லையா? என்பதை சற்று பொறுத்திருந்து பார்க்கலாம்.