'சந்திரமுகி 2' படத்திற்கு இப்படியும் ஒரு சிக்கலா!? அதுக்கு இவர்தான் காரணமாம்!

'சந்திரமுகி 2' படத்திற்கு இப்படியும் ஒரு சிக்கலா!? அதுக்கு இவர்தான் காரணமாம்!

சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாகி பட்டையைக் கிளப்பிய படம்தான் 'சந்திரமுகி'. இப்படத்தை பி.வாசு இயக்கியிருந்த நிலையில், தற்போது 'சந்திரமுகி 2' படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவி மரியா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.

முதல் பாகத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வேட்டையன் கதாபாத்திரத்தில் அருமையாக நடித்து அனைவராலும் ரசிக்கப்பட்டார். இந்நிலையில் இந்த 2ம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் வேட்டையனாக நடிக்கிறார்.

ஏற்கெனவே இவர் நடிப்பில் வெளியான 'காஞ்சனா', 'முனி' உள்ளிட்ட பல த்ரில்லர் படங்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில், இப்படமும் இவருக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் நடிக்கும் நடிகை கங்கனா ரனாவத் படப்பிடிப்பிற்கு வரும்போதெல்லாம் எதாவது ஒரு பிரச்சினையும் நடந்து வருகிறதாம்.

இவர் எந்த இடத்திற்குப் போனாலும், கூடவே ஒரு கூட்டத்தையும் கூட்டிவிட்டுச் செல்லும் இவர், படப்பிடிப்பின் போது, ஜிம் பாய்ஸ், மேக்கப் மேன், இவர்களுடன் இவருடைய பாதுகாப்பிற்காக துப்பாக்கி ஏந்திய 4 பேரும் கூடவே இருக்கிறார்களாம்.

ஏன் இப்படி என்று படக்குழு விசாரிக்கையில், அப்போதுதான் தெரிய வந்தது அந்த விஷயம்.

அதாவது, பொதுவாகவே இவர் தன் வாயால் எதாவது பேசி, அதனால் அவ்வப்போது பல பிரச்சினைகளிலும் மாட்டிக் கொள்கிறாராம். அதன் காரணமாகவே இவரின் பாதுகாப்பை மனதில் கொண்டு, சி ஆர் பி எஃப் வீரர்களுடன் சூட்டிங் வந்து கொண்டிருக்கிறார்.

இதன் காரணமாகவே பட குழுவில் நிறைய குளறுபடிகள் நடந்து வருவதோடு, இதுபோன்ற காரணத்தால் படப்பிடிப்பிற்கு பின்னடைவும் ஏற்படுகிறதாம். இதையடுத்து, எந்தப் பிரச்சினையும் இல்லாமல், இயக்குநர் படத்தை சீக்கிரமாக முடிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com