ஷாருக்கான் -அட்லீயுடன் இணையப் போகும் பிரபலம் இவரா?

ஷாருக்கான் -அட்லீயுடன் இணையப் போகும் பிரபலம் இவரா?

தற்போது ஷாருக்கான் அட்லீ இயக்கும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர்நடித்து வரும் நிலையில், டோலிவுட்டின் பிரபல ஹீரோவும் இணையவுள்ளதாக செய்திகள் கசிந்து வருகிறது.

பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் கடந்த மாதம் வெளியான பதான் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. இந்தப் படம் இதுவரை ஆயிரம் கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அவரது நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தின்மீதான எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறி வருகிறது. அட்லீ இயக்கி வரும் ஜவான் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது.

ஜவான் படத்தின் மூலம் முதன்முறையாக ஷாருக்கான் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னை, மும்பை பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஷாருக்கானுக்கு சரியான வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்நிலையில், டோலிவுட் பிரபலம் ஒருவர் ஜவான் படத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

அதன்படி, ஜவான் படத்தில்"புஷ்பா" புகழ் அல்லு அர்ஜுனை நடிக்க வைக்க அட்லீ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். தெலுங்கில் முன்னணி நடிகராக கலக்கி வரும் அல்லு அர்ஜுன், 2021 இறுதியில் வெளியான புஷ்பா படம் மூலம் பான் இந்தியா ஸ்டாராக மாஸ் காட்டினார். இந்தப் படம் இந்தியா முழுவதும் 400 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதனையடுத்து தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பில் அல்லு அர்ஜுன் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தான், ஜவான் படத்திற்காக அல்லு அர்ஜுனை சந்தித்துள்ளாராம் அட்லீ.

ஷாருக்கான், விஜய் சேதுபதிக்கு இணையான ஒரு கேரக்டரில் அல்லு அர்ஜுனை நடிக்க வைக்க அட்லீ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகிறது. இந்த தகவல் உறுதியானால் பதான் போல ஜவானும் ஆக்‌ஷன் ட்ரீட்டாக அமையும் என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com