ஐஸ்வர்யா -ரஜினி
ஐஸ்வர்யா -ரஜினி

'லால் சலாம்' படத்தில் ரஜினியின் கேரக்டர் இது தானா?

ஜெயிலர் படத்தில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அடுத்து லைகா தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அதில் ‘லால் சலாம்' என்கிற படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கவுள்ளார்.

‘லால் சலாம்' என்ற டைட்டிலில் உருவாகவுள்ள இந்தப் படத்தை கிரிக்கெட்டை பின்னணியாக வைத்து இயக்குகிறார் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா. ‘லால் சலாம் ‘ படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், ரஜினியின் கேரக்டர் குறித்து அப்டேட்கள் கிடைத்துள்ளது.

இத்திரைப்படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் லீடிங் ரோலில் நடிக்கிறார்கள் , இப்படத்திற்கு இசைபுயல் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். முக்கியமாக இந்தப் படத்தில் ரஜினிக்கு கவுரவ வேடம் என்றே சொல்லப்படுகிறது.

 ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

லால் சலாம் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வாரம் 5ம் தேதிபோஸ்டருடன் வெளியானது. மேலும், அன்றே லால் சலாம் படத்தின் பூஜையும் நடைபெற்றது. இதில், ரஜினிகாந்த், லைகா சுபாஸ்கரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்நிலையில், லால் சலாம் படத்தில் ரஜினியின் கேரக்டர் 20 முதல் 30 நிமிடங்கள் மட்டுமே வரும்படி இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனாலும், ரஜினியின் கேரக்டர் செம்ம பவர்புல்லாக இருக்கும் எனவும், இது ரசிகர்களுக்கு தரமான சம்பவமாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையில் தோன்றினாலே அவரது ரசிகர்களுக்கு குதூகலம் தானே! எனவே லால் ஸலாம் திரைப்படத்திற்காக ரஜினி ரசிகர்கர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கிறார்கள்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com