புஷ்பா 2 வில் இந்த ஹீரோயினா? நடனத்தில் பட்டைய கிளப்புவாரே…!

புஷ்பா 2 வில் இந்த ஹீரோயினா? நடனத்தில் பட்டைய கிளப்புவாரே…!

சுகுமார் இயக்கத்தில் உருவாகி மெகா ஹிட்டான படம் புஷ்பா. பான் இந்தியா அளவில் வெளியாகி 500 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி பாகுபலி படத்துக்கு பிறகு பல மொழிகளில் ஹிட்டான படம் என்ற பெயரையும் புஷ்பா திரைப்படம் பெற்றது. அப்படத்தில் அல்லு அர்ஜுன், ஃபஹத்பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

தற்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் புஷ்பா 2 படத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

இந்நிலையில் புஷ்பா 2 திரைப்படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி இந்தப் படத்தில் சாய் பல்லவி நடிக்க கமிட்டாகி இருக்கிறாராம். படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தும் கதாபாத்திரமாக சாய் பல்லவி இருப்பார் எனவும், இதற்காக அவர் பத்து நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் திரையுலகில் பேச்சு எழுந்திருக்கிறது.

சாய் பல்லவி தமிழ்நாட்டை சேர்ந்தவர். மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவான பிரேமம் படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். அந்தப் படத்தில் அவர் ஏற்றிருந்த மலர் டீச்சர் கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது.

அதனைத் தொடர்ந்து தமிழிலும் நடிக்க ஆரம்பித்த சாய் பல்லவி மாரி 2, என். ஜி. கே, கார்கி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதில் கார்கி திரைப்படம் மெகா ஹிட்டானது. அதில் சாய் பல்லவியின் கதாபாத்திரம் பரவலாக பேசப்பட்டது. இதனையடுத்து தெலுங்கிலும் நடிக்க ஆரம்பித்த சாய் பல்லவி நானியுடன் ஷ்யாம் சிங்கா ராய் உள்ளிட்ட படங்களில் நடித்து தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வர ஆரம்பித்திருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com