‘என் சுவாச காற்றோ’ படத்தின் ஹீரோயின் இஷா கோபிகர் வீட்டின் புதிய உறுப்பினர்!

‘என் சுவாச காற்றோ’ படத்தின் ஹீரோயின் இஷா கோபிகர் வீட்டின் புதிய உறுப்பினர்!

நடிகை இஷா கோபிகரை நினைவிருக்கிறதா? தமிழில் நரசிம்மா, என் சுவாசக் காற்றே, காதல் கவிதை என சில படங்களில் நடித்திருந்தார். பிறகு இந்திக்குச் சென்று விட்டார். தமிழில் சொற்பமான படங்களே நடித்திருந்த போதிலும் நிமிடத்திற்கு நிமிடம் முகபாவங்களை மாற்றி அருமையாக உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய நல்ல திறமையான நடிகை என்று பெயரை தக்க வைத்திருநதார். அதனால் தான் இன்றளவும் 90ஸ் ரசிகர்களுக்கு இஷா கோபிகரை நினைவிருக்கிறது.

இஷா கோபிகர் 2009 ஆம் ஆண்டு நவம்பரில் டிம்மி நரங் என்பவரைத் திருமணம் செய்திருந்தார். அவர்களுக்கு ரியான்னா என்றொரு மகள் உண்டு. தற்போது ரியான்னாவுக்கு 9 வயதாகும் நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்கேன் ரிப்போர்ட் ஒன்றைக் காட்டியபடி விடியோ வெளியிட்டிருந்தார் இஷா, அந்த வீடியோவில், விரைவில் எங்கள் வீட்டிற்கு புதி உறுப்பினர் ஒருவர் வரவிருக்கிறார். எங்கள் குடும்பத்தில் ஒருவரான அவரைக் காட்ட நான் மிக ஆவலுடன் இருக்கிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார். கூடுதலாக அவர் கர்ப்பிணியாக இருப்பதைப் போன்ற காட்சிகளையும் அதில் சித்தரித்திருந்தார்.

முதல்முறை அந்த விடீயோ பார்ப்பவர்கள் இஷாவுக்குத் தான் இரண்டாவதாகக் குழந்தை பிறக்கப் போகிறது போலும் என்றே எண்ணிக் கொள்வார்கள். ஆனால், கடைசியில் பார்த்தால் , இஷா தன் டீ ஷர்ட் வயிற்றுக்குள் இருந்து வெளியில் எடுத்தது ஒரு அழகான பப்பி நாய்க்குட்டியை. க்ரீம் நிறத்தில் பார்க்கக் கொள்ளை அழகாய் இருந்த அந்த நாய்க்குட்டியின் வரவை இஷாவும் அவரது மகளும் பின்னணியில் மங்களகரமான இந்திப்பாடல் ஒன்று ஒலிக்க ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகமிட்டு கொண்டாடினர். அந்தக் காட்சிகளில் நாய்க்குட்டி மறைந்து அவர்கள் இருவரும் ஏதோ புதிதாகப் பிறந்த தங்களது வீட்டுக் குழந்தையைக் கொஞ்சி ஆராதிப்பாதாகவே தோன்றியது. வீடியோ பார்க்கப் பார்க்க நெகிழ்ச்சியாக இருந்தது. ஆக, புதிதாகச் சேர்ந்த உறுப்பினர் யார் என்று தெரிந்து விட்டதா இப்போது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com