
சமீபகாலமாகவே தாடி மீசையுடன் வலம் வந்தவர் நடிகர் அஜித். 'துணிவு' படத்திற்காகத்தான் இந்த கெட்டப்பில் இவ்வளவு நாளாக இருந்துவந்தார். இந்நிலையில் அஜித் தற்போது தாடி, மீசை எடுத்து நியு லுக்கிற்கு மாறியுள்ளார்.
கோலிவுட்டின் இரண்டு மாஸ் ஹீராேக்கள்தான் அஜித், விஜய். வரும் பொங்கலன்று அஜித்தின் 'துணிவு' திரைப்படமும், விஜய்யின் 'வாரிசு' திரைப்படமும் வெளியாக விருக்கிறது.
'துணிவு' மற்றும் 'வாரிசு' இந்த இரண்டு படமும் விரைவில் வெளியாகவிருப்பதால், இனிவரும் நாட்களில் இந்த இரண்டு படங்களுக்கான ப்ரொமோஷன்களையும் இனி வரும் நாட்களில் பிரம்மாண்டமாக நடத்தவிருக்கின்றனர்.
நடிகர் அஜித் 'துணிவு' படத்தில் தாடி மீசையுடன், காதில் கடுக்கனுடன் மாஸான லுக்கில் திரையில் மிரட்ட உள்ளார் என்பது 'துணிவு' பட போஸ்டர்களைப் பார்க்கும்போதே தெரிகிறது.
இந்நிலையில் அஜித், தற்போது தாடி மீசையை அகற்றிவிட்டு க்ளீன் ஷேவ் லுக்கில் மாறி எடுத்துள்ள புதிய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. தேவ் சக்திவேல் என்ற செலிபிரிட்டி ஹேர் ஸ்டைலிஸ்ட்தான் தற்போது அஜித்தின் தாடி, மீசையெல்லாம் அகற்றி இந்த லுக்கில் மாற்றியுள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாடி மற்றும் தாடி இல்லாத லுக்கில் அஜித் இருக்கும்படியான படத்தை பகிர்ந்துள்ளதைத் தொடர்ந்து, ஒருவேளை, தல அஜித் 'துணிவு' படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா எனவும், ஒரு சிலர் அஜித்தின் இந்த புது கெட்டப் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிப்பதற்காகத்தான் இருக்கும் எனவும் தங்கள் கேள்விகளையும், கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.