நெல்சனுக்கு ஜாக்கி ஷெராப் தந்த அன்புப் பரிசு!

நெல்சனுக்கு ஜாக்கி ஷெராப் தந்த அன்புப் பரிசு!

யன்தாரா நடித்த கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர், விஜய் நடித்த பீஸ்ட் போன்ற படங்களை இயக்கியவர் நெல்சன் திலீப்குமார். தற்போது இவரது இயக்கத்தில் வெளிவரக் காத்திருக்கிறது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில் ஆகியோருடன் சேர்ந்து இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப்பும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

கடந்த சில மாதங்களாக சமூக வலைதளப் பக்கம் மூலம் யாரையும் சந்திக்காத இயக்குநர் நெல்சன், நேற்று தனது வலைதளப் பக்கத்தில் மஞ்சள் நிற ஸ்கூட்டர் ஒன்றின் மீது அமர்ந்திப்பது போன்ற ஒரு படத்தை வெளியிட்டிருந்தார். அந்தப் படத்தின் கூடவே, ‘இந்த எதிர்பாராத அழகான ஒன்று, உங்கள் எல்லாவிதமான அன்பு ஆகியவற்றிற்கு நன்றி சார்’ என்ற வாசகத்தையும் பதிவு செய்திருந்தார். அதோடு, நடிகர் ஜாக்கி ஷெராப்பையும் அதனோடு டேக் செய்திருந்தார்.

ஜெயிலர் படத்தில் இயக்குநர் நெல்சனோடு சேர்ந்து பணியாற்றிய அனுபவத்தில் மகிழ்ந்த ஜாக்கி, படத்தில் தனது பங்கு படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து இயக்குநர் நெல்சனின் திறமையாலும், அன்பாலும் கவரப்பட்டு இந்த ஸ்கூட்டரை அவருக்குத் தனது அன்புப் பரிசாகக் கொடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com