மணிகண்டன் - மீத்தா ரகுநாத்
மணிகண்டன் - மீத்தா ரகுநாத்

'குறட்டை' பிரச்சனையில் 'ஜெய்பீம்' மணிகண்டன்?

இன்று குடும்பங்களில் பலருக்கும் இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று குறட்டை. இந்த குறட்டையால் மேலை நாடுகளில் தம்பதிகளில் பலர் விவாகரத்து வரை சென்று இருக்கிறார்கள். இந்த குறட்டையை மையமாக வைத்து விநாயக் ரவிச்சந்திரன் என்பவர் படம் ஒன்றை இயக்கி உள்ளார்.

படக்குழுவினர்
படக்குழுவினர்

முழு நீள நகைச்சுவை படமாக எடுத்துள்ள இப்படத்திற்கு இன்னமும் பெயர் வைக்கவில்லை. ஜெய் பீம் படத்தில் ரசிகர்களின் பரிதாபங்களையும், கண்ணீரையும் தனது நடிப்பால் வர வைத்த மணிகண்டன் இந்த படத்தில் முதல் முறையாக தனி கதாநாயகனாக நடிக்கிறார்.

படக்குழுவினர்
படக்குழுவினர்

பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், பகவதி (பக்ஸ் ) என ஒரு நடிகர்கள் பட்டாளமே இந்த படத்தில் இருக்கிறது. படத்தின் தலைப்பு பிரச்சனை தீர்ந்து படம் வெளியாகி நம்மில் பலருக்கு தலையாய பிரச்சனையாக இருக்கும் குறட்டைக்கு இந்த படத்தில் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என நம்புவோம்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com