
நடிகர் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் 525 கோடி வசூலை ஈட்டி இருக்கிறது. இதை அடுத்து தனது 170 வது படத்திற்கு சம்பளத்தை கூடுதல் படுத்த ரஜினி முடிவு செய்திருக்கிறாராம்.
சன் பிக்சர் தயாரிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் தற்போது வரை 525 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை எட்டியதை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் தனது சம்பளத்தை கூடுதல் படுத்த முடிவு செய்திருக்கிறாராம்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான கபாலி, காலா, தர்பார் போன்ற படங்கள் வரவேற்பை பெற்றது. மேலும் அதிக அளவில் வசூலையும் பெற்றன. ஆனால் அதன் பிறகு வெளிவந்த அண்ணாத்தை படமும் பெரிய அளவில் வசூலை ஈட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று உள்ளது.
மேலும் இந்த படம் தற்போது வரை 525 கோடி ரூபாய் வரை வசூலை பெற்று சாதனை படைத்திருக்கிறது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அடுத்து நடக்க இருக்கக்கூடிய 170-வது படத்தில் தனது சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.நடிகர் ரஜினி ஜெயிலர் படத்திற்கு 80 கோடி சம்பளமாக பெற்ற நிலையில், அடுத்து எடுக்கப்பட உள்ள படத்திற்கு 150 கோடி முதல் 200 கோடி ரூபாய் வரை சம்பளமாக கேட்டு உள்ளாராம்.
மேலும் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருக்கும் 170 வது படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தை ஞானவேல் இயக்குகிறார். அது மட்டும் அல்லாது படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், நானி உள்ளிட்டோரும் நடிக்க ஒப்பந்தமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதே நேரம் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய சம்பளம் இந்த அளவிற்கு கூடுதல் பண்ணி இருப்பது சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதே நேரம் தயாரிப்பு நிறுவனம் படத்திற்கான பட்ஜெட் மூன்று மடங்கு கூடுதலாகி உள்ளதால் சற்று கலக்கத்தில் உள்ளதாம்.